திருவிளக்கு ஸ்தோத்ரம்
விளக்கே திருவே வேந்தன் உடன் பிறப்பே
ஜோதி விளக்கே ஸ்ரீதேவி பெண்மணியே
அந்தி விளக்கே அலங்கார கண்மணியே
காஞ்சி விளக்கே காமாட்சி தேவியரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல் நெய்யை விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
பொட்டு மிட்டேன் குங்குமத்தால் பூமாலை சூட்டி வைத்தேன்
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க
வைத்தேன் திருவிளக்கை மாளிகையில் தான் விளங்க
மாளிகையில் ஜோதி உள்ள மாதாவை கண்டு கொண்டேன்
மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாரும் அம்மா
சந்தான பிச்சையுடன் தனங்களையும் தாரும் அம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாரும் அம்மா
கொட்டகை நிறைய பசு மாடு தாரும் அம்மா
புகழுடம்பை தந்து எந்தன் பக்கத்தில் நில்லும் அம்மா
அகதழிவை தந்து எந்தன் அகத்தினிலே வாழும் அம்மா
சேவி தொழுது நின்றேன் தேவி வடிவம் கண்டேன்
வஜ்ர கிரீடம் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்
முத்து கொண்டை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன்
சவிரி முடி கண்டேன் தாழைமடல் சூழ கண்டேன்
பின்னல் அழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
குறுக்கிடும் நெற்றி கண்டேன் கோவை கனி வாயும் கண்டேன்
செந்தாமரை பூமடல் போல் செவி இரண்டும் கண்டு கொண்டேன்
செண்பக பூப்போல திருமூக்கும் கண்டு கொண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசைய கண்டேன்
காலில் சிலம்பு கொஞ்ச காலாழி பீழி கண்டேன்
பட்டாடை தான் உடுத்த படை இரண்டும் கண்டு கொண்டேன்
மங்கள நாயகியே உன்னை மனம் குளிர கண்டு கொண்டேன்
அன்பே அருண் துணையே உன்னை அடைந்த எந்தனுக்கு
வந்த வினை அகற்றி மஹா பாக்கியம் தந்தருள்வாய்
தந்தை தாய் பிறவி நீயே தற்காக்கும் ரக்ஷகி நீயே
அந்தர்திற்கு உதவி செய்யும் ஆதாரமானவள் நீயே
உன்தனையே உறவாக நம்பி உற்றாரை கை விட்டேன் தாயே
சந்தானம் சௌபாக்கியம் அளித்து
சக்திகளும் சேவைகளும் எனக்கருள்வாய்
பக்தி உள்ள மனிதருக்கே பர தேவி க்ருபையுடன் அருள்வாய்