Ramalinga Swamigal – Sivanesa Venba

முதல் திருமுறை / First Thirumurai

004. சிவநேச வெண்பா 
sivanēsa veṇpā

  • 1. முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் 
    சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே – என்னவனே 
    சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே 
    தற்பரனே நின்தாள் சரண். 
  • 2. வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய் 
    நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் – கூறு 
    முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன் 
    புதல்வாநின் தாளென் புகல். 
  • 3. சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப் 
    பேர்சான்ற உண்மைப் பிரமமே – நேர்சான்றோர் 
    நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால் 
    நீடும் படிநீ நிகழ்த்து. 
  • 4. நினைப்பித்தா நித்தா நிமலா எனநீ 
    நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் – நினைப்பின் 
    மறப்பித்தாலி யானும் மறப்பேன் எவையும் 
    பிறப்பித்தாய் என்னாலென் பேசு. 
  • 5. உருவாய் உருவில் உருவாகி ஓங்கி 
    அருவாய் அருவில் அருவாய் – ஒருவாமல் 
    நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ 
    என்தாயே என்தந்தை யே. 
  • 6. வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு 
    நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் – அஞ்சலென 
    எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம் 
    உண்டோ இலையோ உரை. 
  • 7. அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை 
    அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் – இப்பாரில் 
    சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம் 
    சோதிஉரு வாக்குந் துணை. 
  • 8. பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல் 
    யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள் 
    வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள் 
    ஒளியாகி நின்ற உனை. 
  • 9. வந்தித்தேன்131 பிட்டுகந்த வள்ளலே நின்னடியான் 
    சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ – பந்தத்தாஞ் 
    சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே 
    வந்துசிந்திப் பித்தல் மறந்து. 
  • 10. தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன் 
    நானென் றுரைத்தல் நகைஅன்றோ – வான்நின்ற 
    ஒண்பொரு­ உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும் 
    வண்பொருளும் ஈதல் மறந்து. 
  • 11. அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ 
    பண்டங்க ளோசிற் பரவெளியோ – கண்தங்க 
    வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும் 
    எம்பெருமான் நீவாழ் இடம். 
  • 12. பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின் 
    பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே – நாதமெங்கே 
    மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொரு­ 
    பொன்வடிவம் கொள்ளாத போது. 
  • 13. பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின் 
    சீருருவோ தேவர் திருவுருவம் – நேருருவில் 
    சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்நும் 
    கால்விரற்பால் நின்றொடுங்குங் கால். 
  • 14. இன்றோ பகலோ இரவோ வருநாளில் 
    என்றோ அறியேன் எளியேனே – மன்றோங்கும் 
    தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து 
    நாயனையேன் வாழ்கின்ற நாள். 
  • 15. மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை 
    பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை – நண்ணாசை 
    விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப் 
    பட்டால் வருமே பதம். 
  • 16. தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற 
    சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் – முந்தையாய் 
    நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம் 
    வாடுமெனை ஆட்கொள்ளா வாறு. 
  • 17. ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே 
    ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ – வாட்டுகின்ற 
    அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென் 
    நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை. 
  • 18. ஆமோ அலவோ அறியேன் சிறியேனான் 
    தாமோ தரனும் சதுமுகனும் – தாமே 
    அடியா தரிக்கும் அரசேநின் ஏவல் 
    அடியார்குற் றேவலடி யன். 
  • 19. உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே 
    என்னால் உனக்காவ தேதுளது – சொன்னால்யான் 
    தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன் 
    எந்தாயிங் கொன்றுமறி யேன். 
  • 20. சென்றுரைப்பார் சொல்லில் சிறியான் பயமறியான் 
    என்றுரைப்பார் ஆங்கதுமற் றென்னளவே – மன்றகத்தோய் 
    அஞ்சேல் விழியாரை அந்தகனென் பார்மொழியை 
    அஞ்சேன் சிறிதும் அறிந்து. 
  • 21. எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச் 
    சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் – நந்தாச் 
    சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில் 
    எவருண் டெனைப்போல் இயம்பு. 
  • 22. உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ 
    வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ – செப்பறியேன் 
    கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா 
    துண்ணப் பருக்கும் உடம்பு. 
  • 23. ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங் 
    காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் – மாலாகித் 
    தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில் 
    கண்டே வலம்செய்யாக் கால். 
  • 24. ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக் 
    காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் – மாசுந்த 
    விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக் 
    கண்டுஞ் சிரங்குவியாக் கை. 
  • 25. வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து 
    மங்கோடை யாதல் வழக்கன்றோ – எங்கோநின் 
    சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த 
    நீர்சிந்தா வன்கண் நிலை. 
  • 26. வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக 
    வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் – தாயென்றே 
    ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே 
    வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய். 
  • 27. வீட்டார் இறைநீ விடைமேல் வரும்பவனி 
    காட்டா தடைத்த கதவன்றோ – நாட்டாதி 
    நல்லத் துளையா நதிச்சடையாய் என்னுஞ்சீர்ச் 
    செல்லத் துளையாச் செவி. 
  • 28. புல்லங் கணநீர்ப் புழையென்கோ புற்றென்கோ 
    சொல்லும் பசுமட் டுளையென்கோ – சொல்லுஞ்சீர் 
    வீயாத பிஞ்ஞகப்பேர் மெல்லினத்தின் நல்லிசைதான் 
    தோயாத நாசித் துளை. 
  • 29. தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ் 
    நாற்றம் அறியாத நாசியுமோர் – மாற்றமுந்தான் 
    கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான் 
    மூளாது பாழ்த்த முகம். 
  • 30. மான்றாம் உலக வழக்கின் படிமதித்து 
    மூன்றா வகிர்ந்தே முடைநாற – ஊன்றா 
    மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால் 
    தலக்கூடல் தாழாத் தலை. 
  • 31. கல்லென்கோ நீரடைக்குங் கல்லென்கோ கான்கொள்கருங் 
    கல்லென்கோ காழ்வயிரக் கல்லென்கோ – சொல்லென்கோ 
    இன்றா லெனிலோ எடுத்தாளெம் மீன்றாணேர் 
    நின்தாள் நினையாத நெஞ்சு. 
  • 32. சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து 
    கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ – ஒல்லுமன்றத் 
    தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில் 
    சும்மா அடைக்கின்ற சோறு. 
  • 33. சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு 
    மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே – சீர்படைக்க
    எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா 
    துண்ணுவார் உண்ணும் இடத்து. 
  • 34. ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத் 
    தேகோ வதைத்துண் செயலன்றோ – வாகோர்தம் 
    வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார் 
    பாழ்மனையில் சென்றுண் பது. 
  • 35. வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப் 
    பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ – தோயுமயல் 
    நீங்கஅருள் செய்வோய்வெண்ணீறணியார் தீமனையில் 
    ஆங்கவரோ டுண்ணு மது. 
  • 36. கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில் 
    ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் – தண்குழைய 
    பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை 
    வேண்டாதார் வீழ்ந்து விரைந்து. 
  • 37. கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க 
    எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் – மண்ணுலகில் 
    ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார் 
    போமிடத்திற் போவேன் புலர்ந்து. 
  • 38. அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம் 
    வங்கணமே132 வைப்பதினான் வைத்தேனேல் – அங்கணத்தில் 
    நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற் 
    றார்போ லழிக தளர்ந்து. 
  • 39. பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத் 
    தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் – கோவையிட்டுக் 
    கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல் 
    ஓவுவா ராவ133 லுனை. 
  • 40. யாதோ கனற்கண் யமதூதர் காய்ச்சுகருந் 
    தாதோ தழற்பிழம்போ தானறியேன் – மீதோங்கு 
    நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை 
    நாட்டாதார் வாய்க்கு நலம். 
  • 41. என்னெஞ்சோர் கோயில் எனக்கொண்டோய் நின்நினையார் 
    தன்னெஞ்சோ கல்லாமச் சாம்பிணத்தார் – வன்நெஞ்சில் 
    சார்ந்தவர்க்கும் மற்றவரைத் தானோக்கி வார்த்தைசொல 
    நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு. 
  • 42. வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின் 
    உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா 
    நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி 
    என்னென்ப தையா இயம்பு. 
  • 43. பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு 
    பெண்ணான தென்பார் பெரிதன்றே – அண்ணாஅச் 
    சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில் 
    தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து. 
  • 44. எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில் 
    அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் – இங்கேநின் 
    தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந் 
    நாள்வருந்த வேண்டுகின்றேன் நான். 
  • 45. பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு 
    நாவுக் கரையரெனு நன்னாம – மேவுற்ற 
    தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ 
    தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல். 
  • 46. எம்பரவை134 யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார் 
    தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் – வெம்பணையாய் 
    வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே 
    மாயப்பெயர் நீண்ட மால். 
  • 47. நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள் 
    மண்ணில் பழைய வழக்கங்காண் – பண்ணிற்சொல் 
    அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால் 
    அம்மையார் போனடந்தார் ஆர். 
  • 48. வேத முடிவோ விளங்கா கமமுடிவோ 
    நாத முடிவோ நவில்கண்டாய் – வாதமுறு 
    மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க 
    வாசகர்க்கு நீஉரைத்த வாறு. 
  • 49. ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப் 
    பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே – ஓர்தொண்டே 
    நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை 
    வாய்க்கிங் கிஃதோர் வழக்கு. 
  • 50. கோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட 
    வாள்கொண்டு வீசி மடியேனோ – கீள்கொண்ட 
    அங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை 
    இங்கோதி வாழ்த்தாத யான். 
  • 51. ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங் 
    கீயாக் குறையே இலைகண்டாய் – மாயாற்கும் 
    விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து 
    கொள்ளாக் குறையே குறை. 
  • 52. பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது 
    மற்றழுதால் கேட்டும் வராதங்கே – சற்றிருக்கப் 
    பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின் 
    பொற்றாள் பொறாஎம் புலம்பு. 
  • 53. பொன்போல் பொறுமையுளார் புந்திவிடாய் நீஎன்பார் 
    என்போல் பொறுமையுளார் யார்கண்டாய் – புன்போக 
    அல்லாம் படிசினங்கொண் டாணவஞ்செய் இன்னாமை 
    எல்லாம் பொறுக்கின்றேன் யான். 
  • 54. முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல் 
    என்மணத்தில் நீவந் திடாவிடினும் – நின்கணத்தில் 
    ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி 
    இன்றும் ஒருமணஞ்செய் வேன். 
  • 55. செய்யார் அழலேநின் செம்மேனி என்னினும்என் 
    அய்யாநின் கால்பிடித்தற் கஞ்சேன்காண் – மெய்யாஇஞ் 
    ஞான்றுகண்டு நான்மகிழ நந்தொண்டன் என்றெனையும் 
    ஏன்றுகொண் டால்போதும் எனக்கு. 
  • 56. என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத் 
    தின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை – தன்பாலோ 
    யார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை 
    ஓர்பால் கொளநின்றோய் ஓது. 
  • 57. நாணவத்தி னேன்றனையோ நாயேனை மூடிநின்ற 
    ஆணவத்தை யோநான் அறியேனே – வீணவத்தில் 
    தீங்குடையாய் என்னஇவண் செய்பிழையை நோக்கிஅருட் 
    பாங்குடையாய் தண்டிப் பது. 
  • 58. எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும் 
    பச்சென் றிருக்கப் பகர்வார்காண் – வெச்சென்ற 
    நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை 
    அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து. 
  • 59. கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில் 
    உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் – சிற்றறிவேன் 
    வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா 
    என்செய்வேன் நின்னருளின் றேல். 
  • 60. மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென் 
    செய்தால் வருமோ தெரியேனே – பொய்தாவு 
    நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க 
    அஞ்சினேன் அன்பின்மை யால். 
  • 61. மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப் 
    போதேவா என்றே புலம்புற்றேன் – நீதாவா 
    யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து 
    போனாலென் செய்வேன் புகல். 
  • 62. கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை 
    என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் – முன்செய்தோய் 
    நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி 
    என்பால் செயலொன் றிலை. 
  • 63. எண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின் 
    தண்ணிலகுந் தா­ழல் சார்ந்திடுங்காண் – மண்ணில்வருந் 
    தீங்கென்ற எல்லாமென் சிந்தையிசைந் துற்றனமற் 
    றாங்கொன்றும் இல்லாமை யால். 
  • 64. தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத 
    வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் – நாரம்வைத்த 
    வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ 
    ஏணிற் பிறப்பித்த தில். 
  • 65. உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின் 
    வெள்ளென்ற வன்மை விளங்காதோ – நள்ளொன்ற 
    அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின் 
    எச்சங்கண் டாற்போல வே. 
  • 66. நீத்தாடுஞ்136 செஞ்சடையாய் நீள்வேடங் கட்டிவஞ்சக் 
    கூத்தாடு கின்றேனைக் கொண்டுசிலர் – கூத்தாநின் 
    பத்தனென்பர் என்னோ பகல்வேடத் தார்க்குமிங்கு 
    வித்தமிலா137 நாயேற்கும் வேறு. 
  • 67. அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே 
    இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் – துன்புடையேன் 
    பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு 
    மெய்யுடையேன் என்கோ விரைந்து. 
  • 68. என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை 
    உன்னார் உயிர்க்குறுதி உண்டோதான் – பொன்னாகத் 
    தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த138வர்க்குமற்றை 
    யார்க்கும் புகலுன் அருள். 
  • 69. வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான் 
    பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை – எள்ளப் 
    பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான் 
    வெறுத்தால் இனிஎன்செய் வேன். 
  • 70. ஆயிரமன்றேநூறும் அன்றேஈ ரைந்தன்றே 
    ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் – நீஇரவும் 
    எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண் 
    செல்லுமனம் என்செய்கேன் செப்பு. 
  • 71. வஞ்சந் தருங்காம வாழ்க்கையிடைச் சிக்கியஎன் 
    நெஞ்சந் திருத்தி நிலைத்திலையே – எஞ்சங் 
    கரனே மழுக்கொள் கரனே அரனே 
    வரனே சிதம்பரனே வந்து. 
  • 72. தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை 
    வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ – வீழ்விக்கும் 
    ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின் 
    பாங்கான செம்பொற் பதம். 
  • 73. ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந் 
    தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே – தூசொலிப்பான் 
    கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக் 
    கெல்லா நலமுமுள தே. 
  • 74. குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள் 
    சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே – வெற்றம்பல் 
    பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ 
    கைவிட்டால் என்செய்கேன் காண். 
  • 75. தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய 
    தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் – ஊக்கமிகு 
    நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில் 
    எல்லோர்க்கும் ஐயுறவா மே. 
  • 76. இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல் 
    அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு – வன்படையா 
    தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில் 
    இவ்வண்ணம் என்றறிகி லேன். 
  • 77. ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர் 
    பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ – வாய்ப்புலகம் 
    வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல் 
    அஞ்சிநின்னோ டாடும் அது. 
  • 78. கோடும் பிறைச்சடையோய் கோளுங் குறும்புஞ்சாக் 
    காடும் பிணிமூப்புங் காணார்காண் – நீடுநினைக் 
    கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திருவடியைக்
    கண்டார் வடிவுகண்டார் கள். 
  • 79. மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங் 
    கோலெங்கே வானோர் குடியெங்கே – கோலஞ்சேர் 
    அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது 
    கண்டமங்கே நீலமுறாக் கால். 
  • 80. எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற 
    அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் – செவ்வேளை 
    மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும் 
    எக்களித்து வாழ்கின்றேன் யான். 
  • 81. துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர் 
    சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி – நற்சங்கக் 
    காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக் 
    காப்பாய் இஃதென் கருத்து. 
  • 82. என்னமுதே முக்கண் இறையே நிறைஞான 
    இன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் – பொன்னடிக்கே 
    காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கரு­ 
    காதலுற்றுச் செய்தல் கடன். 
  • 83. ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன் 
    பேராத வஞ்சப் பிழைநோக்கி – யாரேனு 
    நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால் 
    என்போல்வார் என்சொல்லார் ஈங்கு. 
  • 84. மெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன் 
    ஐயா அதுநீ அறிந்ததுகாண் – பொய்யான 
    தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான் 
    யாதுசெய்வேன் அந்தோ இனி. 
  • 85. திண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும் 
    எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் – அண்ணலுன்பால் 
    நித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின் 
    சித்தம் இரங்காச் செயல். 
  • 86. கொன்னஞ்சேன் தன்பிழையைக் கூர்ந்துற்று நானினைக்கில் 
    என்நெஞ்சே என்னை எரிக்குங்காண் – மன்னுஞ்சீர் 
    எந்தாய்நின் சித்தத்திற் கேதாமோ நானறியேன் 
    சிந்தா குலனென்செய் வேன். 
  • 87. நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப் 
    பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ – பொன்னன்பர் 
    வைவமே என்னும் வறியேன் அறியேனென் 
    தெய்வமே நின்றன் செயல். 
  • 88. என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே 
    நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் – என்பெரும 
    யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப் 
    போதோ அருள்வாய் புகல். 
  • 89. எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி 
    நொந்தா குலத்தின் நுழைகின்றேன் – சிந்தாத 
    காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும் 
    மீளமகிழ் கின்றேன் விரைந்து. 
  • 90. எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம் 
    வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் – தள்ளலே 
    வேண்டுமென யாரே விளம்புவார் நின்னடியர் 
    காண்டுமெனச் சூழ்வார் களித்து. 
  • 91. வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா 
    மாணிக்க மேகருணை மாகடலே – மாணிக்கு 
    முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு 
    நின்பொற் கழலே நிலை. 
  • 92. முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி 
    எத்தேவர் சற்றே எடுத்துரைநீ – பித்தேன்செய் 
    குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை 
    அற்றமிலா தாள்கின் றவர். 
  • 93. கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம் 
    அங்கச் சுடையாய் அருளுடையாய் – மங்கைக் 
    கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன் 
    இருகூ றளித்தேன் இடர்க்கு. 
  • 94. பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
    கூசத் தெரியேன் குணமறியேன் – நேசத்தில் 
    கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார் 
    எள்ளுவார் கண்டாய் எனை. 
  • 95. ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன் 
    வீணேநன் னாளை விடுகின்றேன் – காணேனின் 
    செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று 
    நம்பாத நாயடியேன் நான். 
  • 96. சிவமே சிவஞானச் செல்வமே அன்பர் 
    நவமே தவமே நலமே நவமாம் 
    வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ 
    படிவுற்ற என்னுட் பயன். 
  • 97. கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர் 
    ஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் – நீளாக்குஞ்
    செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற் 
    கெங்கே இடங்காண் இயம்பு. 
  • 98. திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத 
    வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் – எண்ணெஞ்சில் 
    இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம் 
    எத்தனையும் போதாமை என்று. 
  • 99. இண்டைச் சடையோய் எனக்கருள எண்ணுதியேல் 
    தொண்டைப் பெறுமென் துயரெல்லாம் – சண்டைக்கிங் 
    குய்ஞ்சே139 மெனஓடும் ஓட்டத்திற் கென்னுடைய 
    நெஞ்சே பிறகிடுங்காண் நின்று. 
  • 100. கண்ணா ணிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை 
    அண்ணா அருளுக் கழகன்றே – உண்ணாடு 
    நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின் 
    என்னடியான் என்பாய் எடுத்து. 
  • 101. கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான 
    விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் – மண்ணிற்சில் 
    வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு 
    நானவரைச் சேராமல் நாட்டு. 
  • 102. பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப் 
    பின்னொன் றறியேன் பிழைநோக்கி – என்னை 
    அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே 
    பிடித்தேனுன் பொற்பாதப் பேறு. 
  • 103. துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை 
    நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் – சிற்குணத்தோய் 
    கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக 
    வேற்றுரைத்தே னில்லை விரித்து. 
  • 104. இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென் 
    அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் – இப்பாரில் 
    நானினது தா­ழல் நண்ணுமட்டும் நின்னடியர் 
    பானினது சீர்கேட்கப் பண்