வினைமுற்றுப் பகுபதங்கள்
உண்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் டகரவிடை நிலையும் பெற்று, இடைநிலை டகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.
உண்கின்றான் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும் பெற்று, இடைநிலையீற்று உகலங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.
உண்ணுவான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும்வகரவிடைநிலையும், பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே உகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று ணகரமெய் இரட்டித்து, இரட்டித்த ணகரமெய்யின் மேற் சாரியைஉகரமேறி, இடைநிலை வகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி, முடிந்தது.
நடந்தனன் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுந் தகரவிடை நிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரமிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று
• உண்ணுவான் என்பது எதிர்கால வினையெச்சப் பகுபதமாயின், உண் பகுதி: உ சாரியை: வான் எதிர்கால வினையெச்ச விகுதி.
மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர மெய்யின்மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியை யீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
வருகின்றனன் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றப் பகுபதம், வா என்னும் பகுதியும் அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன் சாரியையும் பெற்று, பகுதி முதல் குறுகி, ரகரவுகரம் விரிந்து, இடைநிலையீற்று உகரங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரவொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியையீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
நடப்பான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னம் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும் பகர விடைநிலையும் பெற்று, இடைநிலைப் பகரம் மிகுந்து, இடைநிலைப் பகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
நடந்தது என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், து என்னும் ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங்காட்டுந் தகர விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அகரச்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர வல்லொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறி முடிந்தது.
நடப்பித்தான் என்னும் பிறவினைப் பகுபதம், நட என்னும் பகுதியும், பி என்னும் பிறவினைப் விகுதியும் பெற்று விகுதி பகரமிகுந்து, அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், பகுதிக்கும் விகுதிக்கும் இடையே இறந்த காலங் காட்டுந் தகர விடைநிலையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, இடைநிலைத் தகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும், அகரச்சாரியையும். பெற்று, சாரியைச் சகரம் மிகுந்து, பகரமிகுந்து, சாரியையீற்று உகலங்கெட்டு உகரங்கெட நின்ற ககரமெய்யின் மேலே சாரியை அகரவுயிரேறி, விகுதி பகர மிகுந்து, அடிக்கப்படு என அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, படு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய்யின் மேல் விகுதி ஆகாரருயிரேறி முடிந்தது.
நடவான் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினை முற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், ஆன் என்னும் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிhமறை ஆகார விடைநிலையும் பெற்று, அவ்விடைநிலை கெட்டு, வகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
நடக்கின்றிலன் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் விகுதியும், கின்று என்னும் நிகழ்கால விடை நிலையும், இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று, கின்றிடை நிலையின் ககரம் மிகுந்து, ஈற்றுகரங் கெட்டு, உகரங்கெட நின்ற றகர மெய்யின் மேல் எதிர்மறையிடை நிலை இகரமேறி, அவ்விடை நிலையீற்று லகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
எழுந்திட்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், ஏழு என்னும் பகுதியும், இடு என்னும் பகுதிப்பொருள் விகுதியும், அவைகளுகடகு இடையே துச்சாரியையும் பெற்று, சாரியைத் தகர மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டுச் சாரியையீற்றுகரங் கெட்டு, உகரங் கெட நின்ற தகர மெய்யின் மேல் விகுதி இகரவுயிரேறி, எழுந்திடு என அனைத்தும், ஒரு பகுதியாக நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, இடு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய் இரட்டி உகரவுயிர் கெட்டு, உகரங்கெட நின்ற டகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
கழிந்தின்று என்னும் எதிர்மறை இறந்தகாலத் தெரிநலைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும் று என்னும் ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங் காட்டுந் தகரவிடைநிலையும், அவ்விடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று, காலவிடை நிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகரமெய்யின் மேல் எதிர்மறையிடைநிலை இகரவுயிரேறி, இடைநிலையீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது. கழிந்திலது என்பது பொருள்
கோடும் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமற்றுப் பகுபதம், கொள் என்னும் பகுதியும், தும் எந்நுந் தன்மைப்பன்மை எதிர்கால விகுதியும் பெற்று, பகுதி முதல் நீண்டு, பகுதஜயீற்று ளகரங் கெட்டு, விகுதித் தகரம் டகரமாகத் திரிந்து முடிந்தது.
அற்று என்னுங் குறிப்பு விணைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன் பால் விகுதியும் பெற்று, விகுதி றகரவல்லொற்று மிகுந்து முடிந்தது.
அன்னையர் எனனுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும் அர் என்னும் பலர்பால் விகுதியும், இவைகளுக்கு இடையே னகரச்சாரியையும் ஐகாரச்சாரியையும் பெற்று, சாரியை னகரமெய்யின்மேற் சாரியை ஐகாரவுயிரேறி, யகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரெறி முடிந்தது.
இன்று என்னுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், இல் என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.
உயர்த்துகிற்பன் என்னும் எதரிகாலத் தெரிநிலைமுற்றுப் பகுபதம், உணர்ந்து என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடைNயு எதிர்காலங் காட்டும் பகரவிடைநிலையும், பகுதிக்குங் காலவிடைநிலைக்கும் இடையே கில் என்னும் ஆற்றல் இடைநிலையும் பெற்று, ஆற்றலிடைநிலையீற்று லகர மெய், றகரமெய்யாகத் திரிந்து, இடைநிலைப் பகரத்தின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
செய் என்னும் முன்னிலை யேலொருமை வினைமுற்றுப் பகுபதம், செய் என்னும் பகுதியோடு ஆய் என்னும்
• அற்று என்பது இறந்தகால வினையெச்சப் பகுபதமாயின், அறு பகுதி; உகரமூர்த்த றகரமெய் இரட்டித்து முடிந்தது எனக்கொள்க.
முன்னிலையேவல் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது
பெயரெச்சப் பகுபதங்கள்
அடித்த என்னும் இறந்தகாலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னம் பகுதியும், அ என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் தகரவிடைநிலையும் பெற்று, இடைநிலைத்தகரம் மிகுந்து, இடைநிலைத் தகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
அடிக்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும், என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னம் நிகழ்காலவிடைநிலையும் பெற்று, இடைநிலைக் ககரம் மிகுந்து, இடைநிலைறீற்றுகரங் கெட்டு, உகரங்கெட, நின்ற றகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறிமுடிந்தது.
வினையெச்சப் பகுபதங்கள்
நின்று என்னும் இறந்தகால வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், உ என்னும் வினையெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே இறந்தகாலங்காட்டும் றகரவிடைநிலையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் இடைநிலை றகர மெய்க்கு இனமாகிய னகரமெய்யாகத் திரிந்து, இடை நிலை றகரமெய்யின் மேல் விகுதி உகரவுயிரேறி முடிந்தது.
நிற்க என்னும் முக்காலத்திற்கும் உரிய வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், இன் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் றகர மெய்யாகத் திரிந்து, சாரியையீற்று உகரங்கெட்டு, உகரங் கெட நின்ற அகரமெய்யின் மேல் இகரவுயிரேறி முடிந்தது.
தோன்றியக்கால் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், தோன்று என்னும் பகுதியும், கால் என்னும் எதிhகால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இன் சாரியையும் அகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று உகரங் கெட்டு, உகலங் கெட நின்ற றகர மெய்யின்மேற் சாரியை இகரவுயிரெறி, சாரியையீற்று னகரமெய் குறைந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின் மேற் சாரியை அகரவுயிரேறி, விகுதிக் ககரமிகுந்து முடிந்தது.
• நிற்க என்பது வியங்கோள் வினைமுற்றுப் பகுபதமாயின், நில் பகுதி, கூ வியங்கோள் விகுதி.
பின்வரும் பொதுப் பகுபதங்களை முடிக்க:-
சாவான்: 1) 2) 3) உடன்பாட்டு தெரிநிலை வினைமுற்று எதிர்மறை தெரிநிலை வினைமுற்று எதிர்கால வினையெச்சம் செய்யாய்: 1) 2) முன்னிலையேவற் பன்மைவினைமுற்று முன்னிலையொருமை யெதிர்மறை வினைமுற்று செய்யீர் 1) 2) முன்னிலையேவற் பன்மை வினைமுற்று முன்னிலைப் பன்மையெதிர்மறை வினைமுற்று தழைப்ப: 1) 2) 3) பலர்பாற் படர்க்கை வினைமுற்று பலவின்பாற் படர்க்கை வினைமுற்று செயவெனெச்சம் அன்ன: 1) 2) குறிப்பு வினைமுற்று குறிப்புவினைப்பெயரெச்சம் செவ்விய: 1) 2) குறிப்பு வினைமுற்று குறிப்புவினைப்பெயரெச்சம் வேட்கும்: 1) 2) எதிhகால வினைமுற்று எதிhகாலப் பெயரெச்சம் வந்து: 1) 2) தன்மையொருமை வினைமுற்று இறந்தகால வினையெச்சம் உண்டு: 1) 2) 3) தன்மையொருமை வினைமுற்று இறந்தகால வினையெச்சம் அஃறிணையொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று தேடிய: 1) 2) 3) 4) இறந்தகால வினைமுற்று வியங்கோள் வினைமுற்று இறந்தகால பெயரெச்சம் எதிhகால வினையெச்சம்
சொல்லினங் கூறுதல்
அவன் வந்தான்
அவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்; திரிபின்மையாகிய எழுவாய்யுரு பேற்றது; அது வந்தான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.
வந்தான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யயிறந்தகால எடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; அது அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.
கொலை செய்தவன் நரகத்தில் வீழ்ந்து வருந்துவான்
கொலை, எ-து. தொழிற்பெயர்; ஆக்கப்படு பொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது செய்தவன் என்னும் வினை கொண்டது.
செய்தவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை விணையாலணையும் பெயர்; திரிபின்மையாகிய எழுவாயுருபேற்றது; அது வருந்துவான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.
நரகம், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; பிறிதின்கிழமைப் பொருட்கு இடமிடமாக நிற்கும் இடப்பொருளில் வந்த அல் என்னும் ஏழனுருபேற்றது; அது வீழ்ந்து என்னும் வினை கொண்டது.
அத்து, எ-து. சாரியையுருபிடைச் சொல். வீழ்ந்து, எ-து. செய்தென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவிணை வினையெச்சம்; வருந்துவான் என்னும் வினை கொண்டது.
வருந்துவான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யெதிர்கால உடன்பாட்டுத் தெரிநிலை வினைமுற்று; செய்தவன் என்னும் எழுவாய்குப் பயனிலையாய் நின்றது.
கொற்றனானவன் தன்னை யெதிர்த்த பகைவரை வாளான்மாய வெட்டினான்.
கொற்றன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர், ஆனவன் என்னும் எழுவாய்ச் சொல்லுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.
தான், எ-து. ஒருமைப் படர்க்கைப் பொதுப் பெயர்; அடையப்படுபொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது எதிர்த்த என்னும் வினை கொண்டது.
எதிர்த்த, எ-து. செய்தவென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவினைப் பெயரெச்சம்; பகைவர் என்னும் வினைமுதற் பெயர் கொண்டது.
பகைவர், எ-து. உயர்திணைப் பலர் பாற் படர்க்கைப் பெயர்; அழிக்கப்படுபொருள் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.
வாள், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; கருவிப் பொருளில வந்த ஆல் என்னும் மூன்றனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.
மாய, எ-து. செயவென்வாய்ப்பாட்டு முக்காலத்திற்கு முரிய தெரிநிலைவினை வினையெச்சம்; இங்கே காரியப் பொருளில் வந்தமையால் எதிர்காலத்து; வெட்டினான் என்னும் வினை கொண்டது.
வெட்டினான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; கொற்றன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.
சொற்றொடரிலக்கணங் கூறுதல்
அவன் வந்தான் – அல் வழிச்சந்தியில் எழுவாய்த் தொடர்.
கொலை செய்தவன் – வேற்றுமைச் சந்தியில் இரண்டாம் வேற்றுமைத் தொகை
செய்தவன் நரகத்தில் – அல்வழிச் சந்தியில் தழாத் தொடராகிய எழுவாய்த்தொடர்.
நரகத்தில் வீழ்ந்து – வேற்றுமைச் சந்தியில் ஏழாம் வேற்றுமை விரி.
வீழ்ந்து வருந்துவான் – அல் வழிச் சந்தியில் வினையெச்சத் தொடர்.
தாழாத்தொடராவது சிலைமொழியானது வருமொழியைப் பொருட்பொருத்தமுறத் தழுவாத தொடர் பொருட்பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவு தொடர்.
முற்றுப்பெற்றது