தீபாவளி லேகியம்
தேவையான பொருட்கள் :
சுக்கு – 25 கிராம்
ஓமம் – 25 கிராம்
சித்திரத்தை – 25 கிராம்
கண்டதிப்பிலி – 25 கிராம்
அரிசித்திப்பிலி – 25 கிராம்
லவங்கப்பட்டை – 2 piece
கசகசா – 10 கிராம்
சோம்பு (optional) – 10 கிராம்
கிராம்பு (லவங்கம் )- 10 கிராம்
மிளகு – 50 கிராம்
சீரகம் – 25 கிராம்
நெய் – 1 கப்
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
தேன் – 1 கரண்டி
வெல்லம் – இதை செய்முறையில் சொல்கிறேன்
செய்முறை :
மேலே கொடுத்துள்ள வற்றில் நெய் , எண்ணை , வெல்லம் , தேன் நீங்கலாக, மற்றவற்றை எல்லாம் , ஒரு வெற்று வாணலியில் , ஒவ்வொன்றாகப் போட்டு , நல்ல வாசனை வரும் வரை வறுக்க வேண்டும் .
ஆறின பிறகு , அனைத்தையும் மிக்ஸியில் , நல்ல நைசாக அரைத்துக்கொள்ளவும்.
விருப்பம் உள்ளவர்கள் சலித்துக் கொள்ளலாம்.
இப்போது இந்த பவுடர் , ஒரு கப்பில் எவ்வளவு வருகிறதோ , அதே அளவு பொடித்த வெல்லம் , எடுத்துக் கொள்ளவும் .
இப்போது , வெல்லத்தை, ஒரு வாணலியில் போட்டு , அது கரைந்த வுடன் , அடுப்பை அணைத்து விட்டு , அழுக்குப் போக வடிகட்டிக் கொள்ளவும் .
இந்த வெல்லச் சாரை , மீண்டும் வாணலியில் கொட்டி , 1 நிமிடம் கழித்து , அதில் அரைத்து வைத்துள்ள பௌடரை கொட்டவும் , கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் , இப்போது உடனே , நெய் , நல்லெண்ணெய் இரண்டையும் விட வேண்டும் .
இப்போது , ஓரங்களில் ஒட்டாமல் வரும் . தளர இருக்கும் பதத்திலேயே , இறக்கி வைத்து விட வேண்டும் .
இறக்கி வைத்தவுடன் , அதில் தேனை விடவும் .
கொஞ்ச நேரத்தில் தானே இறுகிக் கொண்டு விடும் லேகியம் .
நல்ல கெட்டியான பிறகு எடுத்தால் , பிறகு பாத்திரத்தை விட்டு எடுக்க முடியாமல் போய் விடும் .
ஒரு வேளை , இறுகிப் போய் எடுக்க வராமல் இருந்தால் , அதை மீண்டும் அடுப்பில் வைத்து , சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கிளறினால் , மீண்டும் இளகும்.
இதில் இஞ்சி சேர்க்க வில்லை . அதற்கு பதில் சுக்கு சேர்க்கலாம் .
இங்கே குறிப்பிட்ட பவுடர் இல் , அனைத்துமே , உடலுக்கும் , வயிற்றுக்கும், மிகவும் நன்மை சேர்ப்பவை .
திப்பிலி வகைகள் தசை களுக்கு மிகவும் நல்லது.