எல்லோருக்குமே செல்வந்தர்களாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்கு குபேரனுடைய திருவருள் வேண்டும். ஆனால் சிலருக்கு மட்டும்தான் அது வரமாகக் கிடைக்கிறது.
இதற்குக் காரணம் பூர்வ புண்ணியம் என்று சொல்வதுண்டு. உள்ளன்போடு முறையாக வழிபாடு செய்தால் நாம் எல்லோருமே குபேரர் ஆகலாம். அதற்கான ஒரு ஆன்மிக வழிதான் லக்ஷ்மி குபேர பூஜை.
தீபாவளித் திருநாளில் லக்ஷ்மி குபேரனை பூஜை செய்வதால் நமக்கு திருமகள் அருளும் குபேரனுடைய அருளும் கிட்டும். ஏனென்றால், தீபாவளி தினத்தில்தான் மங்கள ரூபனாகிய சிவபெருமான் தன்னிடம் உள்ள நிதிப்பொறுப்புகளை குபேரனுக்கு அளித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
குபேர பூஜை செய்யும் முறை:
பூஜை தொடங்குவதற்கு முன்பு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இடையில் எழுந்திருக்காமல் மனதை ஒருமுகப்படுத்திச் செய்ய வேண்டும்.
பூஜை தொடங்கும் முன் ஒரு முறை குளிக்கலாம். காலையில் குளித்திருந்தால் மஞ்சள் நீர் தெளித்துக்கொண்டு, சிவப்பு நிறப் புடவையை அணிய வேண்டும். இரண்டு குத்து விளக்குகள், ஒரு காமாட்சி தீபம் ஏற்றி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
குடும்பத்தில் அனைவரும் இதில் கலந்து கொண்டு செய்வது நல்லது. பூஜை செய்யும் முன் குபேரன் படத்தருகே வீட்டில் உள்ள காசு, பணம், வெள்ளிப் பத்திரங்கள், தங்க நகைகள் எல்லாவற்றையும் வைத்து அலங்கரிக்க வேண்டும். இந்தப் பொருள்களிலும் அட்சதையைச் சேர்த்து நமஸ்கரிக்க வேண்டும்.
பூஜை விதிகள்:
பூஜையை காலை அல்லது மாலை வேளையில் செய்யலாம். பூஜை செய்யும் போது, வெளியில் இருக்கும் இறைத் திரு உருவங்களுக்கு மட்டுமல்லாமல், நம்முள் உறைந்திருக்கும் இறைவனுக்கும் சேர்த்தே பூஜை செய்கிறோம். ஆகவே, பூஜை செய்யும் போது, நல்ல முறையில் நம்மை அலங்கரித்துக் கொண்டு பூஜையில் அமர வேண்டும்.
ஸ்ரீலக்ஷ்மி, விநாயகர் திருவுருவங்கள் அல்லது படங்களை, சுத்தமாகத் துடைத்து, சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். குபேர யந்திரத்தையும் துடைத்து, அலங்கரிக்கவும்.
ஒரு பலகையில், கோலமிட்டு, சிவப்பு/மஞ்சள்/பச்சை நிறத் துணியை விரித்து, அதில் லக்ஷ்மி தேவி, விநாயகர் திருவுருவங்களை வைக்கவும்.
விநாயகருக்கு வலப்புறமாக லக்ஷ்மி தேவி இருக்க வேண்டும். திருவுருவங்கள், கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். வெள்ளி, தங்க நாணயங்கள் இல்லத்தில் இருக்குமாயின் அவற்றையும் அட்சதை சேர்த்து தனித் தட்டில் பூஜைக்கு வைக்கலாம்.
வடக்குப் பார்த்தாற்போல் ஒரு கோலமிட்ட சிறு பலகை/ ஒரு தாம்பாளம் வைத்து அதில் குபேர யந்திரம் வைக்கவும்.
யந்திரம் இல்லாவிட்டால், ஸ்ரீலக்ஷ்மி குபேரரின் படம் வாங்கி வைத்து, யந்திரத்தை, அரிசி மாவினால் கோலமாக வரையலாம்.எண்களை வெள்ளை அரிசிமாவினாலும் , கட்டங்கள்சிவப்புகுங்குமத்தாலும்,வார்தையை மஞ்சள் பொடியினாலும் வரைய வேண்டும்.
ல*க்ஷ்மி தேவியின் முன்பாக, ஒரு சிறு தட்டில், அரிசி, பருப்பு, மங்கலப் பொருட்கள் நிரம்பிய பித்தளை/தாமிரச் செம்பை வைத்து, அதை, மாவிலை, மஞ்சள் பூசிய தேங்காய் முதலியவற்றால் அலங்கரிக்கவும். படங்களுக்கும் கலசத்துக்கும் பூமாலைகள் அல்லது சரங்கள் சாற்றவும்.
பூஜைக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும். கரங்களை சுத்தம் செய்து கொண்டு, திருவிளக்கு ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது மனதுள் லக்ஷ்மி தேவியைத் தியானித்து, ‘ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி’ என்று சொல்லி ஏற்றவும்.
குபேரனின் திருவுரு முன்பாக, பதினோரு விளக்குகள் ஏற்றுவது சிறப்பு.
ல*க்ஷ்மி தேவி, விநாயகர் திருமுன்பாக, இரு உயரமான குத்து விளக்குகளை வைத்து, நெய்யால் தீபமேற்றவும்.
குபேரருக்கு அருகிலும் ஒரு சிறு காமாட்சி விளக்கு வைத்து, நெய் தீபம் ஏற்றவும்.
பூஜை துவக்கும் முன்பாக, ஊதுபத்தி ஏற்றி வைத்து, நறுமணம் கமழும் சூழலை உருவாக்க வேண்டும்.
பூஜைக்கு, சிவந்த நிற மலர்கள், காசுகள் பயன்படுத்துவது நல்லது. நாணயங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். புதிய நாணயங்கள் பயன்படுத்த இயலுமாயின் செய்யலாம்.
முதலில் விநாயகர் துதியைச் சொல்லி, விநாயகருக்கு, மலர்/அருகம்புல் தூவி வழிபாடு செய்யவும். பின்பு, ஸ்ரீலக்ஷ்மி தேவியை மனதுள் உருவகித்து, தியானித்து, விக்ரகத்தில் எழுந்தருளப் பிரார்த்திக்கவும்.
வெள்ளி தங்க நாணயங்களுக்கு, ( ஒரே மாதிரியான நாணயங்கள் உதாரணமாக ஒரு ரூபாய் நாணயம்) பாலால் அபிஷேகம் செய்து, அதன் பின் நீரால் அபிஷேகம் செய்து, துடைத்து பொட்டு வைத்து, மலர்கள் சமர்ப்பிக்கலாம்.
“சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்க வேண்டும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.
லக்ஷ்மி குபேர ஸ்துதி
“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’
என 108 முறை சொல்லி லக்ஷ்மி குபேர பூஜை செய்ய வேண்டும்.
ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு உபசார பூஜைகள் செய்யவும்.
ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, சிவந்த நிற மலர்கள் அல்லது காசுகளால் அர்ச்சனை செய்யவும்.
அதன் பின், ஸ்ரீகுபேரனுக்குப் பூஜை செய்ய வேண்டும். குபேர யந்திரத்தின் மீது, படத்தில் காட்டியபடி நாணயங்கள் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை வைக்கும் போதும் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வைக்கவும். ஒவ்வொரு கட்டத்திற்கும், புஷ்பம், அக்ஷதை சமர்ப்பிக்கவும்.
“ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய! தனம் தான்யாதி பதயே! தனதான்ய ஸம்ருத்திம்! மேதேஹி தேஹி தாபய ஸ்வாஹா!”
அதன் பின் குபேர அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
சர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்.
1.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!
2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!
4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!
8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!
9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!
10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!
11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!
12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!
13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!
14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!
15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!
16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!—
என்று இம் மந்திரத்தினை காலை மாலை வேளையில் பூஜையில் ஜெபம் செய்து வர சகல கிரக தோசங்களும் பாபமும் தீர்ந்து அஷ்ட ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும்,பெயர் புகழும் உண்டாகி செல்வந்தனாய் வாழ்வார்கள்.
தூப, தீப ஆராதனைகள் செய்து, நிவேதனம், தாம்பூலம் சமர்ப்பிக்கவும். நிவேதனமாக இனிப்புகள் சமர்ப்பிப்பது நல்லது. பாலினால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது பாயசம் விசேஷமாகக் கருதப்படுகின்றது.
குபேரனின் திருவுருவப் படத்திற்கு பூமாலைச் சாற்றி 12 அகல் விளக்கை ஏற்றி வைத்து பால் பாயசம் செய்து, நைவேத்தியம் செய்ய வேண்டும். பூ, அட்சதையை கையில் எடுத்துக் கொண்டு 12 முறை இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
த்வாதஸ லிங்கஸ்துதி:
சௌராஷ்ட்ரே
ஸோமனாதஞ்ச ஸ்ரீசைல்யே
மல்லிகார்ஜூனம் உஞ்சைன்ய
மஹாகாளீம் ஓங்கார மமலேஸ்வரம்
பால்யம் வைத்யனாதஞ்ச டாகின்யாம்
பீமஸங்கரம் ஸேது பந்தேது ராமேஸம்
நாகேஸம் தாறுகாவனே
வாரணஸ்யாம்ஸூ விஸ்வேஸம்
த்ரியம் பகம்கௌதமீதடே
ஹிமாலயேது கேதாராம் குஸ்மேஸஞ்ச
சிவாலயே ஹேதானி ஜ்யோதி லிங்கானி
ஸாயங்கால ஹபடேர் நித்தயம்
ஸப்த ஜன்மக்ருதம் பாபம்
ஸ்மரணேன வினிஸ்யதி:
குபேர நாமாவளி:
ஓம் குபேராய நம:
ஓம் நரவாகனாய நம:
ஓம் சிவஸகாய நம:
ஓம் ஸ்ரீநிவாச ஸந்துஸ்டாய நம:
ஓம் பம்மாவதி ப்ரிய அனுஜாய நம:
ஓம் யக்ஷராஜாய நம:
ஓம் தனதான்யாதிபதயே நம:
ஓம் மணி பத்ரார்ச்சிதாய நம:
ஓம் மான்யாய நம:
ஓம் மஹனீயாய நம:
ஓம் மஹார்ஹ மணி பூஷணாய நம:
ஓம் ஸ்ரீவித்யா மந்த்ர உபாஸஹாய நம:
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகா ப்ரிய பக்தாய நம:
ஓம் திக்பாலாய நம:
ஓம் நவநாயகாய நம:
ஓம் நிதினாம் பதயே நம:
பின் குபேரனுக்குரிய சுலோகம், அர்ச்சனைகளைச் செய்து பால் பாயசத்தை நைவேத்தியம் செய்த பின் கற்பூர ஆரத்தி எடுத்து, குங்குமத்தைக் கரைத்து, அதையும் ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவேண்டும்
கையில் பூ, அக்ஷதை எடுத்துக் கொண்டு, மும்முறை ஆத்மபிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்கவும். தேவியிடம் மனம் உருகப் பிரார்த்திக்கவும்.
அதன் பின் குபேர அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
தூப, தீப ஆராதனைகள் செய்து, நிவேதனம், தாம்பூலம் சமர்ப்பிக்கவும். நிவேதனமாக இனிப்புகள் சமர்ப்பிப்பது நல்லது. பாலினால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது பாயசம் விசேஷமாகக் கருதப்படுகின்றது.
கையில் பூ, அக்ஷதை எடுத்துக் கொண்டு, மும்முறை ஆத்மபிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்கவும். தேவியிடம் மனம் உருகப் பிரார்த்திக்கவும்.
மங்கலமான பாடல்களைப் பாடிக் கொண்டு ஆரத்தி எடுக்கவும்.
பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக, தேவியிடம், மன்னிப்புக் கோரி, பூஜையை நிறைவு செய்யவும்.
பூஜை முடிந்தபின் எல்லோரும் பூ, அட்சதையைச் சேர்க்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்து இதைப் பார்க்கச் சொல்லி அவர்களையும் அட்சதைப் போடச் சொல்லி அவர்களுக்கு பால் பாயசத்தைக் கொடுத்து வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம் தருதல் நல்லது.
குபேரனுக்குப் பிடித்த பிரசாதம் பால் பாயசம். அதனால் தான் அன்று இதைச் செய்து நைவேத்தியம் செய்வது வழக்கம்.
ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே,
தேஹி தபாயஸ்வாஹ!
என்ற குபேர மந்திரத்தை தினமும் சொல்லி குபேரனின் பேரருளைப் பெறுவோம்.
கருணைக் கடலான திருமகள், திருமாலை மணந்த தினமாக, தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. அன்றைய தினம், திருமகளையும், செல்வத்துக்கு அதிபதியும், சிறந்த சிவபக்தனுமான குபேரனையும் வழிபடுவது, சிறப்புகள் பல தர வல்லது.
ஸ்ரீலக்ஷ்மி, பொருட்செல்வம் மட்டுமல்லாது நம் வாழ்விற்குத் தேவையான சகல நலன்களையும் அள்ளி வழங்கும் அன்னை. அஷ்டலக்ஷ்மியாக அருள் மழை பொழியும் அவளே, தீப ஒளித் திருநாளில், குத்து விளக்கின் முத்தொளியில் தீப லக்ஷ்மியாகப் பிரகாசிக்கின்றாள்.
புனர் பூஜை;
மறு நாள், திருவுருவங்களுக்கு, தூப தீபம் காட்டி, இயன்றவற்றை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கி நமஸ்கரித்து, புஷ்பம் அக்ஷதை போட்டு, இருப்பிடம் எழுந்தருளப் பிரார்த்தித்து, சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும்.
மனம் ஒன்றி, இம்மாதிரி பூஜைகள் செய்வது, நிச்சயம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி முதலியவற்றைத் தரும். ஒற்றுமையான, சச்சரவுகளற்ற குடும்பத்தில், திருமகள் நித்தமும் வாசம் செய்கிறாள். நமக்குத் தேவை என்பதே ஏற்படாத வண்ணம் நல்லருள் புரிகின்றாள்.