நவக்கிரக மந்திரங்கள்:
நவக்ரங்களால், நாம் படக் கூடிய துன்பங்களைப் போக்க , ஒவ்வொரு கிரகத்திற்கும் , சொல்ல வேண்டிய , ஸ்லோகங்களை , தமிழிலும் , அதற்கு செய்ய வேண்டிய சில பரிகாரங்களும் , கீழே உள்ளன
சூரியன்
சூரியன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சூரிய தசை அல்லது சூரிய அந்தர் தசையின் போது:
•சூரியனின் கடவுளான சிவனைத் தினமும் வழிபடவேண்டும்.
•தினசரி ஆதித்ய ஹிருதய ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.
•தினசரி காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.
•சூரிய மூல மந்திர ஜபம்:
“ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ”,
40 நாட்களில் 6000 முறை சொல்ல வேண்டும்.
•சூரிய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ஜபா குஸூம ஸங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!
தமிழில்,
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி, வினைகள் களைவாய்!
- 7000 முறை சொல்ல வேண்டும்.
•தொண்டு: ஞாயிறன்று நன்கொடையாக கோதுமை, அல்லது சர்க்கரை மிட்டாய் கொடுக்க வேண்டும்.
•நோன்பு நாள்: ஞாயிறு.
•பூஜை: ருத்ர அபிஷேக பூஜை.
•ருத்ராட்சம்: ஏகமுகி (ஒரு முகம்) அல்லது 12 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்.
•சூர்ய காயத்ரி மந்திரம்
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி|
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||
சூரிய தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தின், 73வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
சந்திரன்
சந்திரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சந்திர தசை அல்லது சந்திர அந்தர் தசையின் போது:
•சந்திரனின் கடவுளான கௌரியைத் தினமும் வழிபடவேண்டும்.
•தினசரி அன்னப்பூர்ணா சோஸ்திரம் படிக்க வேண்டும்.
•சூரிய மூல மந்திர ஜபம்:
“ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக் சந்திராய நமஹ”,
40 நாட்களில் 10000 முறை சொல்ல வேண்டும்.
•சந்திர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!
தமிழில்,
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி!, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி!, சத்குரு போற்றி!
சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!
7000 முறை சொல்ல வேண்டும்.
•தொண்டு: திங்களன்று நன்கொடையாக மாட்டுப்பால் அல்லது
அரிசி கொடுக்க வேண்டும்.
•நோன்பு நாள்: திங்கள்.
•பூஜை: தேவி பூஜை.
•ருத்ராட்சம்: 2 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்.
•சந்திர காயத்ரி மந்திரம்
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||
சந்திர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 5 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
செவ்வாய் (குஜன்)
மங்களன் அல்லது செவ்வாய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் செவ்வாய் தசை அல்லது செவ்வாய் அந்தர் தசையின் போது:
•செவ்வாயின் கடவுளான முருகன் மற்றும் சிவனைத் தினமும் வழிபடவேண்டும்.
•முருகன் மந்திரம் “ஓம் சரவணபவாய நமஹ”
•சிவ மந்திரம் “ஓம் நமச் சிவாய”
சொல்ல வேண்டும்.
•தினசரி முருகன் அல்லது சிவன் சோஸ்திரம் படிக்க வேண்டும்.
•செவ்வாய் மூல மந்திர ஜபம்:
“ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் ஷக் பௌமாய நமஹ”,
40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.
•செவ்வாய் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸப்ரபம் !
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே!
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள் செவ்வாய் மலரடி போற்றி!
அங்காரகனே அவதிகள் நீக்கு!
•தொண்டு: செவ்வாய்க்கிழமை நன்கொடையாக சிவப்பு பயறு கொடுக்கவேண்டும்.
•நோன்பு நாள்: செவ்வாய்.
•பூஜை: முருகன் பூஜை அல்லது ருத்ர அபிஷேக பூஜை.
•ருத்ராட்சம்: 3 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
•அங்காரக காயத்ரி மந்திரம்
வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி|
தந்நோ பௌம: ப்ரசோதயாத்||
செவ்வாய் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின் 36 வது மற்றும் 37 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
மேலும் செவ்வாய் கடன்களை தீர்ப்பவர் மற்றும் செல்வம் கொடுப்பவர்.
புதன்
புதன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புதன் தசை அல்லது புதன் அந்தர் தசையின் போது:
•புதனின் கடவுளான விஷ்ணுவைத் தினமும் வழிபடவேண்டும்.
•தினசரி விஷ்ணு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
•புத மூல மந்திர ஜபம்:
“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் புதாய நமஹ”,
40 நாட்களில் 17000 முறை சொல்ல வேண்டும்.
•புதன் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ப்ரியங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி!
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!!
•தொண்டு: புதனன்று நன்கொடையாக உளுத்தம் பருப்பு கொடுக்கவேண்டும்.
•நோன்பு நாள்: புதன்.
•பூஜை: விஷ்ணு பூஜை.
•ருத்ராட்சம்: 10 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
•புத காயத்ரி மந்திரம்
கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ புத: ப்ரசோதயாத்||
புதன் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 35 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
வியாழன் (குரு)
குரு (வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது:
•குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும்.
•தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.
•குரு மூல மந்திர ஜபம்:
“ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ”,
40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.
•குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!
தமிழில்,
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!
•தொண்டு: வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.
•நோன்பு நாள்: வியாழன்.
•பூஜை: ருத்ர அபிஷேகம்.
•ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
•குரு காயத்ரி மந்திரம்
வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||
குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
சுக்கிரன்
சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சுக்கிர தசை அல்லது சுக்கிர அந்தர் தசையின் போது:
•சுக்கிரனின் கடவுளான தேவியைத் தினமும் வழிபடவேண்டும்.
•தினசரி ஸ்ரீ சூக்தம் அல்லது தேவி துதி அல்லது துர்கா சாலிசா படிக்க வேண்டும்.
•சுக்கிர மூல மந்திர ஜபம்:
“ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ”,
40 நாட்களில் 20000 முறை சொல்ல வேண்டும்.
•சுக்கிர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!
•தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம் வெண்ணை அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.
•நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.
•பூஜை: தேவி பூஜை.
•ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
•சுக்கிர காயத்ரி மந்திரம்
அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||
சுக்கிர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 36 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
சனி
சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது:
•சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும்.
•தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
•சனி மூல மந்திர ஜபம்:
“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”,
40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
•சனி ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
தமிழில்,
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
•தொண்டு: சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.
•நோன்பு நாள்: சனிக்கிழமை.
•பூஜை: அனுமான் பூஜை.
•ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
•சனி காயத்ரி மந்திரம்
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
ராகு
ராகு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ராகு தசை அல்லது ராகு அந்தர் தசையின் போது:
•ராகுவின் கடவுளான பைரவர் அல்லது சிவனைத் தினமும் வழிபடவேண்டும்.
•தினசரி காலபைரவர் அஷ்டகம் படிக்க வேண்டும்.
•ராகு மூல மந்திர ஜபம்:
“ஓம் ஃப்ரம் ஃப்ரீம் ஃப்ரௌம் ஷக் ராகவே நமஹ”,
40 நாட்களில் 18000 முறை சொல்ல வேண்டும்.
•ராகு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்தராதித்ய விமர்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
அரவெனும் ராகு அய்யனே போற்றி!
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி!
ராகுக்கனியே ரம்மியா போற்றி!!
•தொண்டு: சனிக்கிழமை ன்று நன்கொடையாக உளுத்தம் பருப்பு அல்லது தேங்காய் கொடுக்கவேண்டும்.
•நோன்பு நாள்: சனிக்கிழமை.
•பூஜை: பைரவர் அல்லது சிவன் அல்லது சாண்டி பூஜை.
•ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
•ராகு காயத்ரி மந்திரம்
நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||
ராகு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தின், 75 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
அனைத்து ராகு தொடர்பான பிரச்சனைக்கும் துர்கா சப்தசதி ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
கேது
கேது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கேது தசை அல்லது கேது அந்தர் தசையின் போது:
•கேதுவின் கடவுளான பிள்ளையாரைத் தினமும் வழிபடவேண்டும்.
•தினசரி பிள்ளையார் திவதசனம ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.
•கேது மூல மந்திர ஜபம்:
“ஓம் ச்ரம் ச்ரீம் ச்ரௌம் ஷக் கேதவே நமஹ”,
40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.
•கேது ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
பலாச புஸ்பஸ்ஙகாசம்
தாராகாக்ரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்!
வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி!!
•தொண்டு: வியாழனன்று நன்கொடையாக கருப்பு மாடு அல்லது கருப்பு கடுகு கொடுக்கவேண்டும்.
•நோன்பு நாள்: வியாழக்கிழமை.
•பூஜை: கணேச பூஜை.
•ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
•கேது காயத்ரி மந்திரம்
அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி|
தந்நோ கேது: ப்ரசோதயாத்||
கேது தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியில் காண்டத்தின், 50 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
அனைத்து கேது தொடர்பான பிரச்சனைக்கும் சிவ பஞ்சாக்சரி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.