ஒன்றானவன்!
இறைவன் ஒன்றானவன்!
ஒன்றான தத்துவத்தில்
நின்றானவன்
இறைவன் ஒன்றானவன்!
இரண்டானவன்!
இறைவன் இரண்டானவன்!
சிவ சக்தி என்று அவன்
இராண்டானவன்!
இரண்டும் ஒன்றானவன்!
மூன்றானவன்!
இறைவன் மூன்றானவன்!
அரன் மால் பிரமெனன
மூன்றானவன்!
மூன்றும் ஒன்றானவான்!
நான்கானவன்!
இறைவன் நான்கானவன்!
அறம், பொருள், வீடின்பமென
நான்கானவன்!
நான்கும் ஒன்றானவன்!
ஐந்தானவன்!
இறைவன் ஐந்தானவன்
ஐம்பொறியை ஆட்டுவிப்பன் அவன்
ஐந்தானவன்
ஐந்தும் ஒன்றானவன்!
ஆறானவன்!
இறைவன் ஆறானவன்!
ஆறுமுகம் தந்த ஐயன்
ஆறானவன்!
ஆறும் ஒன்றானவன்!
ஏழானவன்!
இறைவன் ஏழானவன்!
மூவெழு உலகாளும் அவன்
ஏழானவன்!
ஏழும் ஒன்றானவன்!
எட்டானவன்!
இறைவன் எட்டானவன்!
அட்டமாசித்தி தரும் அவன்
எட்டானவன்!
எட்டும் ஒன்றானவன்!
ஒன்பதானவன்!
இறைவன் ஒன்பதானவன்!
நவகாளி நாதன் அவன்
ஒன்பதானவன்!
ஒன்பதும் ஒன்றானவன்!
பத்தானவன்!
இறைவன் பற்றானவன்!
பற்றற்ற பரமன் அவன்
பற்றானவன்!
தம் அடியார் பற்றானவன்!
குரு வாழ்க!
குருவே துணை!
திருமூல தேவன் திருவடி சரணம்!
ஓம் நமசிவாய!
திருச்சிற்றம்பலம்!
ஆக்கம்:
சர்க்கரையப்ப வேலாயுத முத்துக் குமார சாமி.