இசைஞானியார் நாயனார்
இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப்போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.
இசைஞானியார் நாயனார்
பெயர்: இசைஞானியார் நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: சித்திரை சித்திரை
அவதாரத் தலம்: ஆரூர் (கமலாபுரம்)
முக்தித் தலம்: திருநாவலூர்
தொன்மம்
திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இசைஞானியார் – சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.
குருபூசை
இசைஞானியார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம்