Maha Sakthi Peetangal

மகா சக்தி பீடங்கள்

மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட தோத்திரம் என்று கூறப்படுகிறது.

சங்கரி பீடத்திற்கான கோவில்கள் – திருக்கோணேச்சரம் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்

காமாட்சி பீடத்திற்கான கோவில்கள் – காஞ்சிபுரம் ஆதி காமாட்சி சக்தி பீடக் கோவில் மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்

ஸ்ருங்கலா தேவி பீடத்திற்கான கோவில்கள் – பன்ஸ்பேரியா ஹன்சேசுவரி காளி கோவில் மற்றும் சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் (இக்கோவில்கள் சக்தி பீடமல்ல. சக்தி பீடத்திற்கான மாற்றுத் தலங்கள்)

சாமுண்டீஸ்வரி தேவி பீடத்திற்கான கோவில்கள் – மைசூர் சாமுண்டீசுவரி சக்தி பீடக் கோவில்

ஜோகுலாம்பா தேவி பீடத்திற்கான கோவில்கள் – ஆலம்பூர் ஜோகுலாம்பா தேவி சக்தி பீடக் கோவில்

ப்ரம்மராம்பிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் – ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பிகை சக்தி பீடக் கோவில்

மஹாலக்‌ஷ்மி தேவி பீடத்திற்கான கோவில்கள் – கோலாப்பூர் மஹாலக்ஷ்மி சக்தி பீடக் கோவில்

எகவீரிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் – நாண்டேட் எகவீரிகா மாதா சக்தி பீடக் கோவில் மற்றும் மாஹூர் ரேணுகா சக்தி பீடக் கோவில்

மஹாகாளி தேவி பீடத்திற்கான கோவில்கள் – உஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில் மற்றும் உஜ்ஜைனி ஹர்சித்தி மாதா சக்தி பீடக் கோவில்

புருஹூதிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் – பித்தாப்பூர் புருஹூதிகா தேவி சக்தி பீடக் கோவில்

கிரிஜா தேவி பீடத்திற்கான கோவில்கள் – ஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்

மாணிக்யம்பா தேவி பீடத்திற்கான கோவில்கள் – த்ரக்ஷராமம் மாணிக்யம்பா சக்தி பீடக் கோவில்

காமாக்யா தேவி பீடத்திற்கான கோவில்கள் – காமாக்யா கோவில்

மாதவீஸ்வரி தேவி பீடத்திற்கான கோவில்கள் – அலோப்பி தேவி சக்தி பீடக் கோவில் மற்றும் மீராப்பூர் லலிதா தேவி சக்தி பீடக் கோவில்

ஜ்வாலாமுகீ தேவி பீடத்திற்கான கோவில்கள் – ஜ்வாலாமுகீ தேவி சக்தி பீடக் கோவில்

சர்வ மங்களா தேவி பீடத்திற்கான கோவில்கள் – கயா மங்கள கௌரி சக்தி பீடக் கோவில்

விஷாலாக்‌ஷி தேவி பீடத்திற்கான கோவில்கள் – காசி விஷாலாக்ஷி சக்தி பீடக் கோவில்

சாரதா தேவி பீடத்திற்கான கோவில்கள் – காஷ்மீர் சாரதா சக்தி பீடம்