Saptamala Sakthi Peeta

சப்த சக்தி பீடங்கள்

காளிகா புராணத்தில் சப்த சக்தி பீடங்கள் என்ற ஏழு பீடங்கள் கூறப்படுகின்றன.[4]

  1. தேவி கோட்டம் (இப்பீடத்தின் இடிபாடுகள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது)[4]

பீடத்தின் இடிபாடுகள் உள்ள இடம் – மேற்கு வங்கம் (India > West Bengal > Dakshin Dinajpur district > Near Balur ghat > Bangarh)

தமிழ்நாட்டில் தேவிபட்டினத்திலுள்ள உலகநாயகி கோவிலே சக்தி பீடமென்பர். அதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. பிருஹன் நீல தந்திரத்தில் தேவிகோட்ட பீடத்தின் தேவி அகிலேஸ்வரி என்ற குறிப்பு உண்டு. அகிலம் என்பதே உலகம் என்று அர்த்தம் ஆவதால் உலகநாயகி கோவிலே சக்தி பீடமென்று கருதப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

தேவிபட்டினம் உலகநாயகி அம்மன் கோவில்

  1. ஒட்யாண பீடம்[4] (தற்போது இல்லை)

பீடம் இருந்த இடம் – பாகிஸ்தான் (Pakistan > North west frontier > Near Mingaora > Swat) வடமேற்கு இந்தியாவில் ஸ்வேத் நதி பாயுமிடத்தில் இந்த பீடம் உள்ளதெனக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த ஸ்வேத் நதி (Swat) கூட சக்தி பீடமாக இருக்கலாம்.

ஒரு சிலர் ஒரிஸாவின் ஒட்யாண பீடமே இது என்கிறார்கள். இது கட்டாக்கின் கிரிஜா தேவி கோவில் அல்லது பூரி பிமலா தேவி கோவிலைக் குறிக்கும். மேலும் ஆதி சங்கரரின் அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் ஒட்யாணே கிரிஜா தேவி என்ற வரி வருகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

ஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்

  1. காமகிரி பீடம் (அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில்)[4]

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

காமாக்யா கோவில்

  1. திக்கர பீடம் (திக்கர வாஸினி கோவில் அஸ்ஸாமில் உள்ளது)[4]

அஸ்ஸாமில் கவுஹாத்தி நகரின் மையத்தில் புக்குரி டேங்க்கின் மேற்குப் பகுதியில் உள்ள உக்ரதாரா கோவில் ஒரு முக்கியமான சக்தி ஆலயம் ஆகும். இது தேவியின் தொப்புள் கொடி விழுந்த சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

அஸ்ஸாம் உக்ர தாரா திக்கரவாஸினி சக்தி பீடக் கோவில்

  1. ஜலந்தர பீடம்[4] (பஞ்சாப் ஜலந்தரிலுள்ள சண்டி என்ற தேவி தலாப் மந்திர்)

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

தேவி தலாப் மந்திர் சக்தி பீடக் கோவில்

  1. பூர்ணகிரி பீடம்[4] (ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலுள்ள அற்புதா தேவி அல்லது உத்தரகாண்டின் பூர்ணகிரி)

ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலுள்ள அற்புதா தேவி – குஜராத்திலிருந்தோ ராஜஸ்தானிலிருந்தோ இங்கு செல்லலாம். மவுண்ட் அபுவிலுள்ள புகழ்பெற்ற கோவில் இதுவாகும். இது ஆதார் தேவி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

உத்தரகாண்டில் உள்ள பூர்ணகிரி – பூர்ணகிரி கோவில் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்து திருவிழாவான “சைத்ர நவராத்திரி” இந்த கோவிலில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது, பல பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வருவர். காளி ஆறு இந்த கோவிலுக்கு மிக அருகாமையில் ஓடுகிறது. மட்ட நிலத்தில் இதனை சாரதா ஆறு என்று அழைப்பர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் இங்கிருந்தே பூர்ணகிரி மலை, காளி ஆறு மற்றும் தனக்பூரை கண்டுகளிக்கலாம். 108 சக்தி பீடங்களுள் ஒன்று. சதி தேவியின் நாபி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த தேவி கோயில் உத்தரகாண்ட்டின் பித்தோர்கர் மாவட்டத்தில் தானக்பூரிருந்து 21 கி.மீ தூரத்தில் காளி நதியின் வலது கரையில் அமைந்துள்ளது. தானக்பூரிருந்து துன்யாஸ் (Tunyas) அல்லது தன்யாஸ் 17 கி.மீ தூரத்தில் உள்ளது மற்றும் அங்கு இருந்து 3 கி.மீ மலையேறி பூர்ணகிரி கோவிலுக்கு செல்ல வேண்டும். தானக்பூர் லக்னோ, தில்லி, ஆக்ரா, டேராடூன், கான்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் நேரடி பஸ் சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

உத்தரகாண்டின் பூர்ணகிரி மாதா சக்தி பீடக் கோவில்

மவுண்ட் அபு அற்புதா தேவி (ஆதார் தேவி) சக்தி பீடக் கோவில்

  1. காமரூபாந்த பீடம் (அஸ்ஸாமின் சந்தியாஞ்சல் மலைகளில் உள்ள வசிஷ்ட ஆஸ்ரம பீடம்)[4] – கவுஹாத்தி அருகில் உள்ள பசிஷ்ட ஆஸ்ரமம்

இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:

வசிஷ்ட ஆஸ்ரமத்தின் தாரா தேவி சக்தி பீடக் கோவில்