Upa Sakthi Peeth

சில முக்கியமான உப பீடங்கள்
உப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும். அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே காண்போம்.

உக்ரதாரா மா / தாராபீட் – மூன்றாவது கண் அல்லது இடது கண் – சந்த்ரசூர் பைரவர் – மேற்கு வங்கத்தின் ராம்பூர் ஹட் ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ

தண்ட்டேஸ்வரி – பற்கள் – பைரவர் – சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்ட்டேவாடா பாஸ்டர் (சட்டீஸ்கரின் ஜக்தல்பூரிலிருந்து 80 கி.மீ)

அகிலாண்டேஸ்வரி (வராஹி பீடம்) – முகவாய் – பைரவர் – திருச்சியின் திருவானைக்கா[5]

தாக்கேஸ்வரி / டாக்கேஸ்வரி – கழுத்தில் அணியும் ஒரு அணிகலன் – பைரவர் – வங்க தேசத்தின் தலைநகர் டாக்கா

சண்டிகா தேவி – இடது கண் – போலே சங்கர் பைரவர் – பீகாரின் முங்கெர் சண்டிகா ஸ்தான்

கனக துர்கா தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – ஆந்திராவின் விஜயவாடா

பம்லேஸ்வரி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகானில் உள்ள டோங்கர்கர்

விந்தியவாஸினி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்திரப் பிரதேசத்தின் மிர்சாப்பூர்

மீனாக்ஷி – மனோன்மணி – பைரவர் – மதுரை

பர்வதவர்த்தினி – சேது பீடம் – பைரவர் – ராமேஸ்வரம்

லிங்கதாரிணி / லலிதா – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்திரப் பிரதேசத்தின் நீம்சார் (நைமிசாரண்யம்)

சாந்த துர்கா – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – கோவா

ஜெயந்தி / பகவதி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்திரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஹஸ்தினாப்பூரின் கர்ண் மந்திர்

கௌரி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் கௌரிஷங்கர் கோவில்

கமலாம்பிகை – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – திருவாரூர்

ஞானாம்பிகை – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – காளஹஸ்தி

பகவதி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – கேரளாவின் சோட்டாணிக்கரை

பத்மாவதி / ஹரிலக்ஷ்மி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – கேரளாவின் திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில்

மஹாகாளி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள பவாகத்

மந்தர் தேவி குலபாய் – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – மஹாராஷ்ட்ரா

தாரா சண்டி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – பீகாரின் சஸ்ஸேராம்

சந்த்ரிகா தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்திரப் பிரதேசத்தின் லக்னோவுக்கு அருகில்

ருக்மிணி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – துவாரகை

ராதை – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – மதுரா அல்லது அதற்கருகில் உள்ள பர்ஸானா ராதா கோவில்

மஹாலக்ஷ்மி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – பத்ரிநாத்

பார்வதி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – கேதார்நாத்

பவானி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – மஹாராஷ்ட்ராவின் துல்ஜாப்பூர் பவானி கோவில்

துர்கா பரமேஸ்வரி / ரக்தேஸ்வரி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – கர்நாடகாவின் கட்டீல்

அன்னபூரணி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – வாரணாஸி

நீலாயதாக்ஷி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – நாகப்பட்டினம்

சிவகாமி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – சிதம்பரம்

அபிராமி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – திருக்கடவூர்

சுந்தரி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – வேதாரண்யம் சிவன் கோவில்

லிங்கதாரிணி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – ஒடிஸாவின் லிங்கராஜா கோவில்

தர்மசம்வர்த்தினி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – திருவையாறு

பராசக்தி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – குற்றாலம் குற்றாலநாதர் கோவில்

சின்னமஸ்தா – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஜ்ரப்பா

பத்மாவதி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – மத்தியப் பிரதேசத்தின் பன்னா

பத்மாவதி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – திருப்பதி

பார்வதி / காளி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்திரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கலிஞ்சர். அங்குள்ள நீல்கண்ட் கோவில் குகையில் உள்ள பார்வதி சக்தி பீட தேவியாக வணங்கப்படுகிறாள்.

தாரி தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – தாரி தேவி கோவில் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் (Garhwal) பகுதியில் அலக்நந்தா நதிக்கரையில் உள்ளது. ஸ்ரீநகர் – பத்ரிநாத் ஹைவேயில் உள்ள கல்யாசார் (Kalyasaur) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் உத்தரகண்ட் மாநில ஸ்ரீநகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், ருத்ரபிரயாக்கில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 360 கி.மீ தொலைவிலும் உள்ளது.

ராஜராஜேஸ்வரி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – தேவல்கர் ராஜராஜேஸ்வரி கோவில் உத்தரகாண்ட்டின் ஸ்ரீநகரிலிருந்து 17 கி.மீ தொலைவில் புகனி – ஸ்ரீநகர் வழித்தடத்தில் உள்ளது.

சூர்க்கண்ட தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – டேராடூனுக்குத் தென்மேற்கே இந்த இடம் உள்ளது. ஆனால் முசோரி மற்றும் லாந்தோரிலிருந்து வரும் பார்வையாளர்களுக்குப் பகல்நேரப் பயணமே நல்லதாகும். இக்கோவில் ஒரு மலை மீது அமைந்துள்ளது. கட்டுக்கல் (Kaddukhal) என்ற கிராமத்தில் இருந்து 1 கி.மீ செங்குத்தான மலையேற்றப் பாதையில் தனல்டி – சம்பா சாலையில் சென்று கோவிலை அடையலாம். முசோரியின் மால் ரோட்டிலிருந்து 34 கி.மீ தொலைவிலும் தேவப்ரயாக்கிலிருந்து 113 கி.மீ தொலைவிலும் உள்ளது.

சந்த்ரபதனி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – சந்திரபதனி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 2,277 மீ) புகழ்பெற்ற சந்த்ரபதனி தேவி கோவில் உள்ளது. இது தேவப்ரயாக் – கீர்த்தி நகர் வழித்தடத்தில் உள்ள கண்டி கல் (Kandi Khal) என்ற இடத்திற்கு வடக்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வழியே நரேந்திர நகரிலிருந்து 109 கி.மீ தொலைவிலும் மற்றும் தேவப்ரயாகையில் இருந்து 31 கி.மீ தொலைவிலும் ஜம்னிகல் (Jamnikhal) உள்ளது. ஜம்னிகலில் இருந்து 7 கி.மீ தொலைவு நடந்து சென்று சந்திரபதனி மலைக்கோவிலை அடைய முடியும்.

காளிதேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – காளிமட் காளி கோவில் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் சுமார் 6000 அடி (1,800 மீ) உயரத்தில் கேதார்நாத் மலைகள் சூழ அமைந்துள்ளது. இக்கோவில் குப்தகாசி மற்றும் உக்கிமட் அருகில் அமைந்துள்ளது.

துர்கா – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – குஞ்சாப்புரி கோவில் தெஹ்ரி மாவட்டத்தில் நரேந்திர நகரிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், ரிஷிகேஷில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், தேவப்ரயாகையில் இருந்து 93 கி.மீ. தொலைவிலும் உள்ள 1,676 மீட்டர் உயரமான மலை மேல் அமைந்துள்ளது.

அருணாம்பிகை / உண்ணாமுலையம்மன் – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – திருவண்ணாமலை

புஷ்டி தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்தரகாண்டின் ஜாகேஸ்வர்

காந்திமதி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – திருநெல்வேலி

கோட் ப்ராம்மரி தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்தரகாண்டின் குமாயூன் பைஜிநாத்

ஜயா தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – நேபாளத்தின் பராஹக்ஷேத்ரா

சீதா தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – ஆந்திராவின் பத்ராச்சலம்

நந்தா தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்தரகாண்டின் அல்மோரா பகுதியிலுள்ள நந்தா தேவி கோவில் மற்றும் நந்தா தேவி மலைகள் அல்லது நைனிதால் சுனந்தா தேவி

மாண்டவி தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் – உத்திரப்பிரதேசத்தின் ப்ரயாகை பகுதியில் மண்டா என்ற இடத்திலுள்ள மாண்டவி தேவி கோவில். இது மண்டாவிற்கு கிழக்கே ஸ்டேட் ஹைவே 102 க்கு அடுத்து உள்ளது. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது மிர்சாப்பூருக்கு மிக அருகிலுள்ளது. அலகாபாத்திலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. சுற்றிலும் விந்திய மலைகளால் சூழப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் ஸ்ரீ . கோமதி அம்மன் – உப ஷக்தி பீடம் – குண்டலினி எழும்பும் அம்பிகையின் சஹஸ்ராரம் விழுந்த பகுதி. பைரவர் – மஹா சர்ப்ப கால பைரவர் (மேல் இடது கையில் பாம்பு வைத்திருப்பார் ),( இடம் Tirunelveli மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ . சங்கர நாராயண சுவாமி கோயில் – தமிழ்நாடு )