Bhairavar and Kali Mantras

பைரவர் வழிபாடு

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார்.

பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது.

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.

கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்

மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்ரி மந்திரம் இதோ.

பைரவர் காயத்ரி மந்திரம்:

(அஷ்ட சித்திகளை பெற)

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
க்ஷேத்ர பாலாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கசிச்நாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்

“ஒம் க்ஷேத்ரபாலாய ச வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்டராய தீமஹி
தந்னோ பைரவ் ப்ரசோதயாத்”

(சேத்ரபாலனே, தட்டில்லா பயணம் செல்ல துணையிருப்பாய்
மட்டில்லா மகிமை மிக்க சர்வேசா போற்றி.)

“ஒம் திகம்பராய வித்மஹே
கால நிர்ணயாய தீமஹி
தந்னோ பைரவ ப்ரசோதயாத்”

(எட்டு திக்குகளை ஆடையாக அணிபவனே,
சட்டெனக் காலம் மாறிடச் செய்யும் திகம்பரனே,
தொட்டு வரும் துயர் யாவும் போக்கிடுவாய் பைரவனே போற்றி.)

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரீ
(பொன் பொருள் சேர்ந்திட)

ஒம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரம்ஹாத் மஹாய தீமஹி
தந்னோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்

”ஒம் ஸ்வர்ண ரூபாய வித்மஹே
ருத்ர அம்சாய தீமஹி
ன்னோ பைரவ ப்ரசோதயாத்”

(பசும் பொண்ணின் உருவனே, ருத்ர பசுபதியின் வடிவே,
குறைவில்லா பொன்னருளவாய் பைரவா சரணம்)

ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் காயத்திரீ
(சூரிய கிரக தோஷம் நீங்க)

”ஒம் ஹேம ரூபாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ண பைரவ ப்ரசோதயாத்”

(பொண் நிற பைரவனே, குறைவில்லா அருளைத் தரும்
ஆகர்ஷண பைரவா, உன்னருள் தவறாமல் தந்திடுவாய்)

ஸ்ரீ கபால பைரவர் காயத்திரீ
(சந்திர கிரக தோஷம் நீங்க)

”ஒம் கபால ஹாராய வித்மஹே
காலதண்டாய தீமஹி
தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத்”

(கபால மாலை தரித்து, கால தண்டம் ஏந்தி ஞாலம்,
புகழ், வீரம், சீலம் தந்து வாழ்விக்கும் கபால பைரவரே போற்றி.)

ஸ்ரீ சண்ட பைரவர் காயத்திரீ
(செவ்வாய் கிரக தோஷம் நீங்க)

”ஒம் சர்வசத்ரு சம்ஹாராய வித்மஹே
மஹா தீராய் தீமஹி
தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்”

(சகல எதிரிகளையும் அழித்த மாஹா தீரனே போற்றி
உன்னைத் துதிப்போர்க்கு துணையாய் இருப்பாய் போற்றி.)

ஸ்ரீ உன்மத்த பைரவர் காயத்திரீ
(புதன் கிரக தோஷம் நீங்க)

”ஒம் மந்த்ர ரூபாய வித்மஹே
தண்டினி மனோகராய தீமஹி
தன்னோ உத்தம பைரவ ப்ரசோதயாத்”

(மந்த்ர பொருளாய் நிற்கும் மகேசனே, மாதா வராஹியின் மனம் கவர்ந்தவரே
போற்றி. வருவாய் வந்து நல்லருள் தருவாய் உன்மத்த பைரவரே போற்றி.)

ஸ்ரீ அஸிதாங்க பைரவர் காயத்திரீ
(குரு கிரக தோஷம் நீங்க)

”ஒம் ஞான ஸ்வரூபாய வித்மஹே
வித்ய கடாட்சாய தீமஹி
தன்னோ அஸிதாங்க பைரவ ப்ரசோதயாத்”

(கலைஞான வடிவனே, மலையெனக் கல்வி ஞானம்
அளிப்பாய், மோனத்திரு உருவே அஸிதாங்க பைரவரே போற்றி.)

ஸ்ரீ குரு பைரவர் காயத்திரீ
(சுக்கிர கிரக தோஷம் நீங்க)

”ஒம் ஆனந்த ரூபாய வித்மஹே
சர்வ ப்ரகாசாய தீமஹி
தன்னோ குரு பைரவ ப்ரசோதயாத்”

(ஆனந்த வடிவானவனே,அற்புதச் சுடரின் ஒளியே,
குரு பைரவரே உன் பொற்பாதம் பணிந்தேன். போற்றி.)

ஸ்ரீ குரோதன பைரவர் காயத்திரீ
(சனி கிரக தோஷம் நீங்க)

”ஒம் கபில வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தன்னோ குரோதன பைரவ ப்ரசோதயாத்”

(கருமையான நிறம் கொண்டவரே, திரு அருள் தரும்
தெய்வமே பொற்றி, மறை குரோதன பைரவரே போற்றி.)

ஸ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்திரீ
(ராகு கிரக தோஷம் நீங்க)

”ஒம் மங்கள ரூபாய வித்மஹே
சண்டிகா ப்ரியாய தீமஹி
தன்னோ ஸ்ம்ஹார பைரவ ப்ரசோதயாத்”

(மங்களத்தை தரும் மகேசனின் வடிவமே, சங்கரி சண்டிகை உள்ளம்
கவர்ந்தவரே, பணிந்து வணங்கினேன் உனை சங்கார பைரவரே போற்றி.)

ஸ்ரீ பீஷண பைரவர் காயத்திரீ
(கேது கிரக தோஷம் நீங்க)

”ஒம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸர்வானு க்ரஹாய தீமஹி
தன்னோ பீஷண பைரவ ப்ரசோதயாத்”

(த்ரி சூலத்தை கரத்தில் வைத்திருப்பவரே, சூது, வாது, சூழ்
வினைகள யாவற்றையும் போக்கும் பீஷ்ண பைரவரே போற்றி.)

காலையில் எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிந்துகொண்டு, மேலே உள்ள மந்திரத்தை மனதார 108 முறை ஜபிக்க வேண்டும்.

மந்திரத்தை ஜபித்த பின்பு பைரவரிடம் துன்பங்கள் அனைத்தையும் விலக்கி அருளும்படி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை ஜெபிக்கும் சமயங்களில் நிச்சயம் உடலும் மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

எண்ணத்தை எங்கோ வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை ஜபிப்பதால் எந்த பயனும் இல்லை.

பைரவர் வழிபாட்டிற்குரிய தினங்கள்

பைரவ மூர்த்தியை அனைத்து தினங்களிலும் வழிபாடு செய்யலாம் என்றாலும் மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிறப்பான தினமாக இருக்கிறது.

இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் சிவன் கோவிலில் இருக்கும் பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

பைரவர் வழிபாடு பயன்கள்:

பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும்.

துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்.

எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்

எதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.

அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு.

இது போன்ற பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் காளி மந்திரம் இதோ:

ஓம் காளி நமஹ;
ஓம் மாகாளி நமஹ;
ஓம் ஜெய காளி நமஹ;
ஓம் உக்கிர காளி நமஹ;
ஓம் உத்தண்ட காளி நமஹ;
ஓம் ஓங்கார காளி நமஹ;
ஓம் ஆஙகார காளி நமஹ;
ஓம் ருத்ர காளி நமஹ;
ஓம் நீலி நமஹ;
ஓம் சூலி நமஹ;
ஓம் திரிசூலி நமஹ;
ஓம் முப்புரத்து நீலி நமஹ;
ஓம் சங்கரி நமஹ;
ஓம் பயங்கரி நமஹ;
ஓம் பூரணி நமஹ;
ஓம் காரணி நமஹ;
ஓம் மோஹினி நமஹ;
ஓம் யோகினி நமஹ;
ஓம் வர்த்தினி நமஹ;
ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ; ஓம் ஆனந்த ரூபிணி நமஹ;
ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;
ஓம் பவானி நமஹ;
ஓம் பைரவி நமஹ; ஓம் ஈஸ்வரி நமஹ;
ஓம் அகிலாண்டேசுவரி நமஹ; ஓம் மந்தி தாரணி நமஹ;
ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;
ஓம் காளி !
ஓம் மாகாளி ஓம்
ஓம் மாகாளி ஸ்வாஹ!

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, காளியை நினைத்து இந்த மந்திரத்தை கூறிவந்தால் உங்களுடைய பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.