இறை வாகன காயத்திரி மந்திரங்கள்!
(மயில், நந்தி, கருடன்,)
ஸ்ரீ மயில் காயத்ரீ
(விஷக்கடி ஆபத்துகள் நீங்க)
”ஒம் மயூராய வித்மஹே
சுக்ல பாதாய தீமஹி
தன்னோ சிகி ப்ரசோதயாத்”
(வடிவேலன் வாகனமான மயிலே,
பணிந்திட்டேன், விஷக்கடியிலிருந்து என்னைக்
காப்பாய் மயிலே சரணம்.)
ஸ்ரீ நந்தி காயத்திரீ
(சிவ கடாட்சம் பெற)
ஒம் தத் புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்னோ நந்தி ப்ரசோதயாத்!
(தேவ புருஷனே, ஒரே எண்ணம்
கொண்ட சிவ பக்தனே, சிவ கடாட்சம்
பெற்றவரே, நந்தி தேவரே அருள்புரிவாய்!)
ஸ்ரீ கருடன் காயத்ரீ
(மரண பயம் நீங்க)
”ஓம் பட்சி ராஜாய வித்மஹே,
விஷ்ணு வாகனாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்”
(பட்சிகளின் அரசே, பெருமாளின் வாகனமாய்
இருக்கும் கருடபகவானே, உள்ளத்தில் காலன் பயம்
ஒழித்து கள்ளமிலா பக்தர் தமை காத்திடுவாய்.)
ஸ்ரீ லட்சுமி குபேரர் காயத்திரீ!
(செல்வ வளம் பெருக)
ஸ்ரீ லட்சுமி குபேரர் காயத்திரீ
(செல்வ வளம் பெருக)
”ஒம் யகேஷசாய ச வித்மஹே
வைஷ்ரவனாய தீமஹி
தந்னோ ஸ்ரீத ப்ரசோதயாத்”
(யாகம் செய்து சிறப்பு பெற்றவனே, வளமளிக்கும்
மகேசன் தோழா செல்வ வளம்
அருளவாய் குபேரா போற்றி.)
”ஒம் மகேஸ்வரப் ப்ரியாய வித்மஹே
வைஷ்ரவணாய தீமஹி
தந்னோ குபேர ப்ரசோதயாத்”
(மகேஸ்வரருக்குப் பிரியமானவரே, சங்க நிதி,
பத்ம நிதி அடைந்த குணநிதியே, உன் மகத்துவத்தினால்
நிறைவான தனம் பெருகச் செய்வாய் குபேரா போற்றி.)
ஸ்ரீ ப்ரம்மா காயத்திரீ!
(விதிகளின் பாதிப்பு குறைந்திட)
”ஒம் கமலாசனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்னோ ப்ரம்ம ப்ரசோதயாத்”
(வேதங்களின் நாயகனே, பேதமில்லா
பெருங்கருணையே, வேதம் ஓதுபவரின் உளம்
வாழ் பிரம்மனே போற்றி.)
ஸ்ரீ மன்மதன் காயத்திரீ
(மனவிருப்பப்படி மணமாலை அமைய)
”ஒம் புஷ்ப ஹஸ்தாய வித்மஹே
ரதிதேவி நாதாய தீமஹி
தந்னோ அனங்க ப்ரசோதயாத்”
(ஐந்து மலர் கனைகள் கொண்டவனே, ரதிதேவி
நாயகனே, மதி அழகுடன் விதி மீறா திறன் கொண்ட
அனங்க ரூப மன்மதனே போற்றி.)
ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரீ
(பயம், அச்சம் நீங்க)
”ஓம் ஸ்ஹஸ்ர சீர்ஷாய வித்மஹே,
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ சேஷ ப்ரசோதயாத்”
(1000 தலை கொண்ட நல்ல அரவே, பரந்தாமன்
பள்ளி கொள்ள பாயான பாம்பரசே வரம்தா
பயம் நீங்க அருள்வாய் உன்னருளே.)
ஸ்ரீ சுதர்சனமூர்த்தி காயத்திரீ
(விபத்துக்கள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)
”ஒம் சக்ர ராஜாய வித்மஹே
சகஸ்வர ஜ்வாலாய தீமஹி
தந்னோ சக்ர ப்ரசோதயாத்”
(விஷ்ணுவின் கரங்களில் சுழலும் சக்கரமே,
கவலைகளின் இருளை நீக்கும் கனலே,
பகை அச்சம் தீர்ப்பாய் சுதர்சனா போற்றி..)
ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்திரீ
(சகல காரியங்களும் சித்தியாக)
சகல காரியங்களும் சித்தியாக)
”ஒம் அஞ்சனா ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்னோ ஹனுமன் ப்ரசோதயாத்”
(அஞ்சனையின் மைந்தனே, ஆஞ்சநேயனே,
அரும் காற்றின் மைந்தனே,
ராமதூதன் அனுமனே போற்றி.)
ஸ்ரீ நாகராஜன் காயத்ரீ
(சர்ப்ப தோஷங்கள் விலகிட, சந்தான பாக்யம் பெற)
”ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே,
நாகமணி சேகராய தீமஹி
தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்”
(ஸர்பங்களின் அரசே, ஒளிமிகக் கொண்ட நாகமணியை
வைத்திருக்கும் நாகதேவனே, நலம் தந்து
குலம் காப்பாய் வலம் வந்து உனைப் பணிந்தேன்.)
ஸ்ரீ ராகவேந்திரர் காயத்திரீ
(அருள் கிடைத்திட)
ஒம் பிரகலநாதாய வித்மஹே
வியாசராஜாய தீமஹி
தந்னோ ஸ்ரீ ராகவேந்த்ர ப்ரசோதயாத்!
(நரசிம்ம பக்தன் பிரகலாதன் வழி
வந்தவரே, வியாச அரசரே,
ராகவேந்திரரே அருள் புரிவாய்!)
ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர் காயத்ரீ
(காணாமல் போன பொருள் கிடைத்திட)
”ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே,
சகஸ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ அர்ஜுன ப்ரசோதயாத்”
(ஆயிரங்கை கொண்ட அரசனே, சேயுயிர்கள்
காத்தவனே, தவறியது கிட்டிட அருள்வாய்
கார்த்தவீர்யா போற்றி.)
20.ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்திரீ
(மகிழ்வான வாழ்விற்கு)
ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்திரீ
(மகிழ்வான வாழ்விற்கு)
”ஒம் த்ரிமூர்த்தி ரூபாய வித்மஹே
அனசூயா புத்ராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்”
(மும்மூர்த்தியரின் திருவடிவே,
முனிபத்னி அனுசூயாவின் புத்திரனே,
வழமுடன்வாழ அருள்வாய்.)
ஸ்ரீ வாஸ்து பகவான் காயத்திரீ
(வீடு மனைகள் கட்ட)
ஓம் தத்புருஷாய வித்மஹே
யோகமூர்த்யாய தீமஹி
தன்னோ வாஸ்துமூர்தி ப்ரசோதயாத்
ஓம் வாஸ்துநாதாய வித்மஹே
சதுர்புஜாய தீமஹி
தன்னோ வாஸ்துதேவ ப்ரசோதயாத்
”ஓம் தனுர் தராயாய வித்மஹே
ஸர்வ ஸித்திச்ச தீமஹி
தன்னோ தரா பிரசோதயாத்”
(குடும்பம் வாழ்வு பிரகாசித்திட
வீடுகளில் அமர்ந்து நல்வாழ்வு அளிக்கும்
பகவனே எல்லா பாக்கியங்களும் அளித்திடுவாய்!)
ஸ்ரீ துளசி காயத்திரீ
(அறியாமல் செய்த பாவங்கள் நீங்க)
”ஓம் ஸ்ரீ ப்ருந்தா தேவ்யை ச தரிபுராய வித்மஹே
துளசி பத்ராய தீமஹி
தன்னோ துளஸீ பிரசோதயாத்”
(ப்ருந்தா தேவியே, துயர் போக்கி
துன்பமறுக்கும் மாதாவே, தூயவளே
துளசி தாயே போற்றி.)
ஸ்ரீ சாஸ்தா காயத்திரீ
(பயங்கள் நீங்க)
”ஓம் பூதநாதாய வித்மஹே
பச நந்தநாய தீமஹி
தன்னோ சாஸ்தா பிரசோதயாத்”
(ஐம்பூதம் அடக்கும் ஐயனே சரணம்.
ஐயமில்லா வாழ்வருளும் சாஸ்தாவே
சரணம், உய்ய நலம் தருவாய் ஐயப்பனே சரணம்.)