நவகிரக காயத்திரி மந்திரங்கள்!
(சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,
குரு/வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது)
நவகிரக சூரிய பகவான் காயத்திரீ
(பார்வை பலம்பெற, ஆரோக்கியம் சிறக்க)
”ஓம் அச்வத் வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய பிரசோதயாத்”
(சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும்
ஞாயிறே போற்றி, சூரியா போற்றி சுந்திரா
போற்றி வினைகளைக் களைவாய் வீரியா போற்றி.)
”ஓம் ஏகசக்ராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய பிரசோதயாத்”
(ஒற்றைச் சக்ரத்தில் உலகை ஊர்ந்து சுழலன்று
சூழ்வினைகளைச் சுட்டுப் போக்கி சுடரெளியால்
அகிலம் காக்கும் ஆதியத்தனே போற்றி.)
நவகிரக சந்திர பகவான் காயத்திரீ
(மனம் ஒரு நிலைப்பட, சோம்பல் விலக)
”ஓம் பத்வத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னோ ஸோம பிரசோதயாத்”
(குறைகள் தீர்க்கும் திங்களே, தாமரை மலரைத் தாங்கி
தரணியெங்கும் தண்னொளி தருபவனே,
தாழ்விலா மனம் தரும் தண்ஒளி மதியே போற்றி.)
நவகிரக செவ்வாய் பகவான் காயத்திரீ
(வீடு மனை பிரச்சனைகள், சகோதர வேற்றுமைகள் தீர)
”ஓம் வீரவத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம பிரசோதயாத்”
(சிறப்புறுமணியே செவ்வாய்த் தேவே குணமுடன் வாழ
குறையிலாதருள்வாய் மங்களச் செவ்வாய் மலரடிபோற்றி,
அங்காரகனே அவதிகளை நீக்குவாய்.)
”ஓம் பூமி புத்ராய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம பிரசோதயாத்”
(புவித்தாயின் புதல்வனே, தவிப்போர் துயர் நீக்கும்
தீரனே, அங்காரகனே, கரம் குவித்து உன்னைப்
பணிந்தேன் போற்றிப் போற்றியே.)
நவகிரக புதன் பகவான் காயத்திரீ
(ஞாபக சக்தி அதிகரித்து படிப்பில் உயர்வு அடைய)
”ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்”
(இதமுற வாழ இன்னல்கள் நீக்கி சுகம் தரும்
புதபகவானே, யானையை கொடியில் கொண்டவனே பதம்
தந்தருளவாய் உதவி அருளும் உத்தமனே.)
நவகிரக ஸ்ரீ குரு/வியாழன் பகவான் காயத்திரீ
(கோடி நன்மைகள் பெற்றிட)
’ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத”
(இடபக்கொடி கொண்டவனே, தடங்கல் தடைகள்
தகர்ப்பவனே, ப்ருஹஸ்பதி வியாழப் பரமகுரு நேசா
க்ரஹதோஷ மின்றி கடாட்சித் தருள்வாய்.)
நவகிரக சுக்கிர பகவான் காயத்திரீ
(கல்யாணத் தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமையாக வாழ)
”ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர பிரசோதயாத்”
(அசுவக் கொடியுடைய அசுர குருவே, சுபமிகு தருவாய்,
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே வக்கிரமின்றி
வரமிகு அள்ளிக் கொடுப்பாய் அருளே.)
நவகிரக சனி பகவான் காயத்திரீ
(நோய்கள் நீங்க, தொழிலில் முன்னேற்றம் அடைய)
”ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த பிரசோதயாத்”
(காகத்தை வாகனமாக கொண்ட சனி பகவானே
கட்க ஆயுதத்தால் மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
குறையின்றி வாழ இன்னருள் தா சனீபகவானே.)
நவகிரக இராகு பகவான் காயத்திரீ
(காலசர்ப்ப தோஷம் நீங்க)
”ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹூ பிரசோதயாத்”
(அரவக்கொடியுடைய ராகு அய்யனே. கஷ்டங்கள் நீக்கித்
தொடர் அருள்புரிவாய், அனைத்திலும் வெற்றி பெற
அருள் தருவாய் ராகுவே சரணம்.)
நவகிரக கேது பகவான் காயத்திரீ
(ஞானமும் வீடு பேறும் அடைய)
”ஓம் அச்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுவே பிரசோதயாத்”
(பரியினைக் கொடியில் கொண்ட கேதுவே கீர்த்தித் திருவே.
பாபம் தீர்ப்பாய். வாதம் வம்பு வழக்குகளின்றி
ரக்ஷிப்பாய் கேதுவே சரணம்.)