Shri Mahavishnu Gayatri

விஷ்ணு காயத்திரி மந்திரங்கள்!

ஸ்ரீ மகாவிஷ்ணு காயத்ரீ
(குறையாத செல்வம் சேர)

”ஓம் நாரயாணாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

(அலைகடலில் துயிலும் அரியே, கலை உயர்
வாசுதேவ மைந்தா, அலைமகள் நாதா அருள்வாய்.)

ஸ்ரீ நிவாசன் காயத்ரீ
(திருமகள் அருள் கிடைக்க)

”ஓம் நித்ய மங்களாய வித்மஹே,
சத்ய ரூபாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாஸ ப்ரசோதயாத்”

(மங்களம் நிறைந்திட்ட மாதவா, எங்கும் தர்மம்
காப்பாய், நிலையான செல்வம் அருள்வாய்.)

ஸ்ரீ திருமால் காயத்ரீ
(செல்வ வளம் செழிக்க)

”ஓம் லக்ஷ்மி வல்லபாய வித்மஹே,
சேஷ சயனாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

(திருமகள் மனம் மகிழ் திருமாலே, சேஷனின்மீது
சயனம் கொண்டவனே, அருள் தரும் விஷ்ணுவே போற்றி.)

”ஓம் லக்ஷ்மீ காந்தாய வித்மஹே,
சக்ர தாராய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

(அலைமகள் நாதனே, கரத்தில் சக்கர்ப்படைக் கொண்டவனே,
அகிலம் போற்றும் அரங்கனே விஷ்ணுவே போற்றி.)

”ஓம் தாமோதராய வித்மஹே,
வாசு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

(உலகை உன்னுள் கொண்டவனே, அரக்கர் சேனை
அழித்தவனே அரியே, நன்மையருள்வாய் நாரணனே சரணம்.)

ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ
(குழந்தைப்பேறு கிட்ட)

”ஓம் தேவகி நந்தனாய வித்மஹே,
திவ்ய மங்களாய வாசுதேவாய தீமஹி
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்”

(உத்தமி தேவகி பாலனே, உலகை உனக்குள் காண்பித்த
உத்தமனே, குலம் தழைக்க வரமருள்வாய் கோவிந்தா சரணம்.)

ஸ்ரீ நரசிம்மர் காயத்ரீ
(தீவினைகள், தீயசக்திகள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)

”ஓம் வஜ்ர நகாய வித்மஹே,
தீஷனே தம் ஷட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹ ப்ரசோதயாத்”

(நகமே ஆயுதமாய் கொண்ட ஆளரியே, மாறாத துயரங்கள்
அழித்து, சீரான வாழ்வளிப்பாய் சிங்கபிரானே சரணம்.)

”ஓம் ஸ்தம்ப ஸம்பவாய வித்மஹே,
உக்ர ரூபாய தீமஹி
தந்நோ நரஸிம்ஹ ப்ரசோதயாத்”

(தூணிலே தோன்றி பக்தர் துயர் துடைத்தவனே,
தூய நரசிங்கபிரானே உன் திருவடி சரணம்.)

ஸ்ரீ பூவராஹர் காயத்ரீ
(தாவர சங்கம சொத்து பிரச்சனைகள் தீர)

”ஓம் ஹிரண்ய கர்ப்பாய வித்மஹே,
பூவ ராஹாய தீமஹி
தந்நோ க்ரோடஹ ப்ரசோதயாத்”

(பூவுலகைக் காத்திட்ட புண்ணியனே, பூமாதா துயர் துடைத்த
மாயவனே, செல்வமெலாம் தா எனக்கு பூவராஹா சரணம்.)

ஸ்ரீ ராமர் காயத்ரீ
(தாம்பத்யத்தில் ஒருவருக்கு ஒருவர் என்றிருக்க)

”ஓம் தசரத புத்ராய வித்மஹே,
சீதா நாதாய தீமஹி
தந்நோ ராமசந்த்ர ப்ரசோதயாத்”

(பத்துரதன் புதல்வா, சீதை மணவாளா, எத்தினமும்
என்னைக் காப்பாய் ஏகதீரா, உத்தம குணராமா சரணம்.)

”ஓம் சத்ய ரூபாய வித்மஹே,
ஏக பத்னி விரதாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்”

(சத்தியத்தின் வடிவாய் நிற்பவனே, நித்தியமும்
பதி தர்மம் காக்கும் உத்தம ராமனே சரணம்.)

ஸ்ரீ கோதண்டராமர் காயத்ரீ
(நல்லவை நடந்திட)

”ஓம் கோதண்ட ஹஸ்தாய வித்மஹே,
ஜகன் நாதாய தீமஹி
தந்நோ ஸ்ரீராம ப்ரசோதயாத்”

(கோதண்டம் ஏந்திடும் கோமகனே, அயோத்தி
மன்னவனே, உன் அடிபணிந்தேன், ஸ்ரீராமா சரணம்.)

ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்திரீ
(கல்வி அறிவு பெற்றிட)

”ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹய்க்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரஸோதயாத்”

(கல்வியின் அதிபதியே, குருவே, ஞான ஹயக்ரீவா,
என மூச்சினுள் கலந்து அருள்புரிவாய்.)

”ஓம் அச்வ ரூபாய வித்மஹே
வாகீச்வராய தீமஹி
தந்நோ ஹயக்ரீவ ப்ரஸோதயாத்”

(கலை வாணியின் குருவே வாகீசா, ஞானத்தின் பேரருளே
அருள்வாய் விரையமாகா கல்வியருள் ஹயக்ரீவா போற்றி.)

ஸ்ரீ கூர்மம் காயத்ரீ
(எதிர்பாரா ஆபத்துக்கள் நீங்க)

”ஓம் கச்சப ரூபாய வித்மஹே,
கருணா சாகராய தீமஹி
தந்நோ கூர்ம ப்ரசோதயாத்”

(அலைகடலில் கூர்மமாக அமர்ந்தவனே, மலையாக வரும் துயரம்
நீக்கிடுவாய், நிலையான நிம்மதியை தந்திடுவாய் நின்னடி போற்றி.)

ஸ்ரீ கோபாலன் காயத்ரீ
(கால்நடை வளம் பெருக)

”ஓம் தாமோதராய வித்மஹே,
ருக்மணீ வல்லபாய தீமஹி
தந்நோ கோபால ப்ரசோதயாத்”

(அகிலத்தை உருவாகக் கொண்டவனே, ருக்மணியின் மணாளனே,
ஆநிரை வளம் பெற அருள்வாய் அச்சுதனே கோபாலனே போற்றி.)

ஸ்ரீ வாமனர் காயத்ரீ
(நல்ல பிள்ளைகள் பிறக்க)

”ஓம் த்ரிவிக்ரமாய வித்மஹே,
விஸ்வரூபாய தீமஹி
தந்நோ வாமன ப்ரசோதயாத்”

(விண்ணிற்கும் மண்ணிற்கும் உருக்கொண்டவனே,
திருவிக்ரமனே, வருவாய் அருள்வாய் வாமனரே நின்னடி போற்றி.)

ஸ்ரீ சுதர்சனமூர்த்தி காயத்திரீ
(விபத்துக்கள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)

”ஒம் சக்ர ராஜாய வித்மஹே
சகஸ்வர ஜ்வாலாய தீமஹி
தந்னோ சக்ர ப்ரசோதயாத்”

(விஷ்ணுவின் கரங்களில் சுழலும் சக்கரமே, கவலைகளின்
இருளை நீக்கும் கனலே, பகை அச்சம் தீர்ப்பாய் சுதர்சனா போற்றி..)

ஸ்ரீ தன்வந்த்ரி காயத்திரீ
(நோய்களிலிருந்து விடுபட)

”ஒம் தத்புருஷாய வித்மஹே
வைத்ய ராஜாய தீமஹி
தந்னோ தன்வந்த்ரி ப்ரசோதயாத்”

(மகா புருஷனே, வைத்தியர்களுக்கெல்லாம் அரசனே,
இன்பமுடன் வாழ ஆரோக்கியம் அருள்வாய் தன்வந்த்ரி பகவானே.)

”ஓம் ஆதிவைத்யாய வித்மஹே,
அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி
தந்நோ தன்வந்த்ரி ப்ரசோதயாத்”

(ஆதி வைத்தியனே, அமிர்த கலசம் கையில் கொண்டிருப்பவனே
ஆயுளுடன் ஆரோக்கியமும் தருவாய் தன்வந்த்ரி பகவானே.)