Sithar Gayatri & Moola mantras

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும்.

பதினெண் சித்தர்களை துதித்து மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல் நொண்டிச் சிந்து

ஆதி பராபரையாள் சிவசத்தி
அம்பிகையின் பாதமதைக் கும்பிட்டு நித்தம்
கோதிலாச் சுடரொளியில் திரிகோணக்
குஞ்சரத்தின் பாதமலர் தஞ்சமாய்க் கொண்டு 1

திருமூலர் காலாங்கி போகர்
தென்பொதிகைக் குருமுனி தன்வந்திரியர்
கருவூரார் இடைக்காடர் அத்திரி
கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே. 2

சுந்தரா னந்தர் கபிலர் கொங்கணர்
சூதமுனி கோசிகர் வேதமுனிவர்
நந்தீசர் சட்டைமுனிவர் தன்னை
நான்தொழு தேனடி தாள்பணிந்தேன். 3

அஞ்சுபுலக் கதவறிந்து பிரம
மந்திரத்தின் உண்மைவழி விந்தை தெரிந்து சஞ்சலந் தனைப்பிரிந்து சித்தாதிகள்
தாள்பணிந் தேன் நான் துணிந்தே. 4

சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்

அகஸ்தியர் (ஞானம் உண்டாக)

ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

கருவூரார் (ஆயுள் தீர்க்கம் பெற)

ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
சௌபாக்ய ரத்நாய தீமஹி
தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்

காலங்கிநாதர்

ஓம் வாலை உபாசாய வித்மஹே
புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்

திருமூலர் (தியான யோகம் பெற)

ஓம் ககன சித்ராய வித்மஹே
பிரம்மசொரூபிணே தீமஹி
தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்

பதஞ்சலி (யோகங்கள் சித்தி அடைய)

ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

புண்ணாக்கீசர்

ஓம் ஈசத்வாய ச வித்மஹே
ரணனாவாய தீமஹி
தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்

சுந்தரானந்தர் (சகல காரியங்களும் சித்தி பெற)

ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்

போகர்

ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
மன்மதரூபாய தீமஹி
தன்னோ பிரபஞ்ச சஞ்சார
சீனபதிர்ஷி ப்ரசோதயாத்

அகத்தியர் அருளிய “பிரம காயத்ரி” மந்திரத்தைப் பார்ப்போம்.

பாரப்பா அசபையிலேபிரம காயத்திரி
பரிவாக சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பேரப்பா ஓம் அங்உங் மகாலம்வம்நசிமசி
பிர்மதே வாயசுவாகா வென்றுஓது
சாரப்பா சுத்தவெள்ளை பிரகாசிக்கும்
சரசுவதி வார்த்தைசொல்வாள் கலைகெல்லாமே

பிரம காயத்ரி மந்திரம் “ஓம் அங்உங் மகா லம்வம் நசிமசி
பிர்மதேவாய சுவாகா”

இந்த பிரம காயத்ரியை செபிப்பவர்களுக்கு சகல கலைகளில் தேர்ச்சியும் அட்டாங்க சித்தியும் கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.

எல்லாம் சரிதான்! இந்தக் காயத்ரி மந்திரங்களை எவ்வாறு செபிப்பது?

அதனையும் அகத்தியர் தனது நூலில் பின்வருமாறு விவரித்திருக்கிறார்.

தினந்தோறு மவுனமதால் தியானஞ்செய்ய
திறமான ரகசியமா மந்திரந்தன்னை
ஓதுவது நூத்தெட்டு உருவேதானும்
அய்யனே மண்டலம்தான் சொல்லக்கேளு
கூவிமன மசையாமல் மவுனமாக
கூர்மையுடன் னந்திசந்தி உருசெய்யே

இந்த இரகசிய காயத்ரி மந்திரங்களை தினமும் அந்தி சந்தி வேளைகளில் நூற்றியெட்டு தடவைகள் வீதம் ஒரு மண்டலத்திற்கு செபிக்க வேண்டும் என்கிறார்.  முக்கியமாக இந்த மந்திரங்களை உதடுகள் அசையாமல் உள்ளுக்குள் செபிக்க வேண்டும் என்கிறார். அவர் மேலும் ஒரு காயத்ரி மந்திரத்தினை ஒரு மண்டலகாலம் செபித்து முடித்தபின்னரே மற்றைய காயத்ரி மந்திரத்தினை செபிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

குறிப்பு :-  ஒரு மண்டலம் – 48 நாட்கள்.

சித்தர்களின் மூல மந்திரங்கள்

“ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!”
அகத்தியர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்…
“ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!”
போகர் மூல மந்திரம்…
“ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!”
கோரக்கர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!”
தேரையர் மூல மந்திரம்…
. ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!”
சுந்தரானந்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!”
புலிப்பாணி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!”
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!”
காக புசண்டர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!”
இடைக்காடர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!”
சட்டைமுனி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!”
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!”
கொங்கணவர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!”
சிவவாக்கியர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!”
உரோமரிஷி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!”
குதம்பை சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!”
கருவூரார் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!”

நட்சத்திரங்களுக்கான சித்தர் மூல மந்திரங்கள்

1 அஸ்வினி நட்சத்திரம் – மேஷ ராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :

2 பரணி நட்சத்திரம் – மேஷ ராசி :

ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :

3 கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் – மேஷ ராசி :

ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :

4 கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ரிஷப ராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :

5 ரோகிணி நட்சத்திரம் – ரிஷப ராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :

6 மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ரிஷப ராசி :
ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :

7 மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ரிஷப ராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :

8 மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப ராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

9 மிருகசீரிடம் நட்சத்திரம் 4ம் பாதம் – மிதுன ராசி :
ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

10 திருவாதிரை நட்சத்திரம் – மிதுன ராசி :
ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :

11 புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – மிதுன ராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :

12 புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – கடக ராசி :
ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :

13 பூசம் – நட்சத்திரம் கடக ராசி :
ஓம் ஸ்ரீம் – குங் குருங் குரிங் ஸ்ரீ கமலமுனியே நம :

14 ஆயில்யம் நட்சத்திரம் – கடக ராசி :
ஓம் ஸ்ரீம் ம் அம் – உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :

15 மகம் நட்சத்திரம் – சிம்ம ராசி :
ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

16 பூரம் நட்சத்திரம் – சிம்ம ராசி :
ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

17 உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – சிம்ம ராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் – ஸ்ரீ இராம தேவரே நம

18 உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – கன்னி ராசி :
ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

19 உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – கன்னி ராசி :
ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :

20 உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – கன்னி ராசி :
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீய
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :

21 அஸ்தம் நட்சத்திரம் – கன்னி ராசி :
ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22 சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – கன்னி ராசி :
ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

23 சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – துலாம் ராசி :
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

24 சுவாதி நட்சத்திரம் – துலாம் ராசி :
ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

25 விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – துலாம் ராசி :
ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

26 விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – விருச்சிக ராசி :
ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

27 அனுஷம் நட்சத்திரம் – விருச்சிக ராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

28 கேட்டை நட்சத்திரம் – விருச்சிக ராசி :
ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :

29 மூலம் நட்சத்திரம் – தனுசு ராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நமஹ

30 பூராடம் நட்சத்திரம் – தனுசு ராசி :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :

31 உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – தனுசு ராசி :
ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

32 உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – மகர ராசி :
ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

33 திருவோணம் நட்சத்திரம் – மகர ராசி :
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

34 அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – மகர ராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

35 அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – கும்ப ராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :

36 சதயம் நட்சத்திரம் – கும்ப ராசி :
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :

37 பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – கும்ப ராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :

38 பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – மீன ராசி :
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :

39 உத்திரட்டாதி நட்சத்திரம் – மீன ராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :

40 ரேவதி நட்சத்திரம் – மீன ராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம்

பைரவர் (அஷ்ட சித்திகளை பெற)

இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை பைரவர் காயத்ரி மந்திரங்கள்.

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்யும் தன்மை மிக்க ஸ்ரீ பைரவரை முறைப்படித் தொழுது வணங்க நம் தீரா வினைகள் அனைத்தும் தீரும்.

வனதுர்கை மந்திரம்

ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தும் உத்திஷ்ட புருஷி கிம்
ஸ்வபீஷி பயம்மே சமுபஸ்திதம் யதி சக்யம்
அசக்யம் வா தன்மே பகவதி சமய சமய ஸ்வாஹா

செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்

பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்