Sivan Gayathri Mantras

சிவன் காயத்ரி மந்திரங்கள் !

ஓம்நமசிவய!

ஸ்ரீ சிவன் காயத்ரீ
(நீண்ட ஆயுள் பெற)

”ஒம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ஈச ப்ரசோதயாத்”

(தேவர்கள் தலைவா, பாவங்கள் போக்கும் பரமா,
மூவரில் முதல்வா, முக்கண்ணா சரணம்.)

ஸ்ரீ சங்கரன் காயத்ரீ
(சங்கடங்கள் விலக)

”ஒம் சர்வேஸ்வராய வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ சங்கர ப்ரசோதயாத்”

(திரிசடை தெய்வமே, கங்கையை விரிசடையில் கொண்டவனே,
நெற்றிக் கண்ணால் சங்காரம் செய்பவனே, சங்கரா சரணம்.)

ஸ்ரீ ருத்ரன் காயத்ரீ
(அபயம் அளித்து காத்து அருள் வழங்கிட)

”ஒம் பார்வதி நாதாய வித்மஹே
பரமேஸ்வராய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்”

(வேதம் போற்றும் மெய்ப்பொருளே, வேதவல்லி மணவாளனே,
உலகின் ஈசனே, நாதவடிவான நமசிவாயமே சரணம்.)

ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய காயத்ரீ
(யம பயம் நீங்க)

”ஒம் ம்ருத்யுஞ்ஜயாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்”

(காலனை வென்றிட்ட காலகாலா, கனகத்தின் நிறமுடைய கங்காதரா,
காலன் வரும் வேளையில் தவறாமல் என்னைக் காப்பாய், சரணம்.)

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காயத்திரீ
(ஞானமும், கல்வியும், குரு கடாட்சமும் பெற்றிட)

’ஓம் தட்சிணாமூர்த்தியே ச வித்மஹே
த்யான ஹஸ்தாய தீமஹி
தந்தோ ஈஸ பிரசோதயாத”

(தட்சினாமூர்த்தியே, தியானங்களுக்கு அரசே உன்னை
தியானிப்போர்க்கு ஞானம் அளிப்பாய் குருவே.)

”ஒம் ஞானேஸ்வராய வித்மஹே
தத்வபோதாய தீமஹி
தந்னோ தேவ ப்ரசோதயாத்”

(சின் முத்திரை காட்டும் ஞானேஸ்வரனே, தத்துவங்களை
போதித்து மன்னுயிர்க்கு ஞானம் அளிப்பாய் போற்றி.)

”ஒம் வாகீசாய வித்மஹே
தட்சிணாமூர்த்தியே தீமஹி
தந்னோ ஈஸ ப்ரசோதயாத்”

(தென்முக தட்சிணாமூர்த்தியே, யாவர்க்கும் குருவே,
உன்னருள் ஈவாய் உமாபதியே போற்றி போற்றி.)

ஸ்ரீ வீரபத்திரர் காயத்ரீ
(தொழிலில் முன்னேற்றம் பெற)

”ஒம் பஸ்மாயுதாய வித்மஹே
சம்ஹார ரூபாய தீமஹி
தன்னோ வீரபத்ர ப்ரசோதயாத்”

(பஸ்மாயுதம் பெற்றவனே, துஷ்டர்களை சம்ஹாரம் செய்பவனே, அரளிமாலை
அணிந்த செந்நேத்திரனே, பணியிலே உயர்வளிப்பாய் மகாவீரபத்ரா சரணம்.)

ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்திரீ
(துர் சக்திகளும் தீவினைகளும் அகல)

”ஒம் சாலுவே சாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்னோ சரப ப்ரசோதயாத்”

(சரசரவென்ற தீமை, பரபரவெனும் பாவம், அரஅர என போக
ராஜபட்சி உருவான சரபேசனே காத்திடுவாய் சர்வேசா போற்றி.)